கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி.
புறப்பொருள் வெண்பாமலை
- ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு திருமணத்தை நடத்தலாம்
ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்
2. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்
3. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
மங்கு திரையை நம்பி ஆற்றில் இறங்காதே
4. சோழியன் குடுமி சும்மா ஆடுமா
சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா
5. களவும் கற்று மற
களவும் கவறு மற
6.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்
ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்
7.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பான்
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு
9. குரைக்கிற நாய் கடிக்காது
குழைகிற நாய் கடிக்காது
10. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லை காணோம்
கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்
11. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்
12. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
மனிதன் நல்லவன் ஆவதும் பெண்ணாலே, தீயவை அழிவது பெண்ணாலே
13. ஆத்துல ஒரு கால் சேத்துல கால்
அயத்தில் ஒரு கால் செயத்தில் கால்
14. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
அகத்தில் போட்டாலும் அளந்து போடணும்
15. அடிமேல் ஆதி வைத்தால் அம்மியும் நகரும்
அடிமேல் ஆதி வைத்தால் அம்மையும் நகரும்
16. பழம் நழுவி பாலில் விழுந்தது போல
பழம் நழுவி பாகில் விழுந்தது போல
17. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை
18. கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான்
கண்டு அதை கற்றவன் பண்டிதன் ஆவான்
19. கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே
20. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதினவன் ஏட்டை கெடுத்தான்
படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதினவன் ஏட்டை கொடுத்தான்