Can we colonize amazing Mars in 2050? செவ்வாய் கிரகம் 2050இல் குடியேற முடியுமா?

Can we colonize amazing Mars in 2050?

நம்ம பூமியில் இருந்து மிக அருகில் இருக்க கூடிய ஒரு கோள் தான் செவ்வாய் கிரகம். பூமியிலிருந்து 73 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இந்த செந்நிற கிரகம் ரொம்பவே அழகா இருக்கு. 2050குள் இந்த  கிரகத்திற்கு எப்படியாவது போகணும் அங்கே வாழ்க்கை தொடங்கணும் இது தான் வானியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு, கற்பனை எல்லாமே.

செவ்வாய் கிரகத்திற்கு போவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? அங்கே வாழ்க்கை அமைப்பதற்கான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Can we colonize amazing Mars, terraforming

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம் ரொம்பவே குளிரான ஆளே இல்லாத ஒரு கிரகம். -128 டிகிரி செல்சியஸ்ல உறை பனி மற்றும் அடர்ந்த புழுதி படர்ந்த ஒரு கோள் தான் செவ்வாய் கிரகம். சாதாரண கண்களால் இந்த கிரகத்தை ரொம்ப தெளிவா பார்க்க முடியாவிட்டாலும், இந்த கிரகம் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

பூமியில் இருந்து பார்க்கக்கூடிய கோள்கள்.

செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து பார்க்கக் கூடிய ஐந்து கிரகங்களில் ஒன்று(Mercury, Jupiter, Mars, Venus and Saturn). மற்ற கோள்களை காட்டிலும் செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து மிகவும் அருகில் இருப்பதால், மனித எல்லைக்கு எட்டக்கூடிய ஒரு உறுதியான கோள்.

ஆராய்ச்சியாளர்களின் மிகப்பெரிய கேள்வி, மிகவும் உயர் அறிவுசார் தொழில்நுட்பங்களை வைத்துக் கொண்டு, பூமி மட்டும் தான் மனித எல்லை என்று நம்மை முடக்கிக் கொள்ளாமல், வானில் நம்மால் முடிந்த வரை பயணம் செய்து மற்ற கிரகங்களை ஆராயாமல் விட்டு  விட்டால், மனித குலம் தோன்றி என்ன பலன்?

செவ்வாய் கிரகத்தின் தனித்தன்மை

மற்ற கிரகங்களை ஒப்பிடும் போது, செவ்வாய் கிரகம் அருகில் இருக்கக் கூடிய ஒரு சிறந்த கிரகம், செவ்வாய் கிரகம் செல்வது சற்றே சுலபமான காரியம்  கூட. அனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது சற்றே கடினமான ஒன்று.

இன்றைய தேதியில் கூட செவ்வாய் கிரகம் செல்வதற்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல், தனிப்பட்ட மனிதர்கள் கூட மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல், இந்த பயணம் இன்னும் 20 ஆண்டுகளில் சாத்தியம் என்று கூறுகிறார்கள்.

ஐம்பது வருடங்களாக செவ்வாய் கிரகத்திற்கு ஆள் இல்லாத விமானங்கள் பல்வேறு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு அதிசயத்தை இந்த செவ்வாய் கிரகம் நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது.

அந்த ஆராய்ச்சி முடிவுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளதாக ஆணித்தரமாக நிரூபிக்கின்றன.

உறைந்த பனி இந்த கிரகம் முழுவதும் 30% ல இருந்து 40% வரை முழுவதுமாக உறைந்து இருக்கு / உறைந்த தண்ணீரோட படலாமா இருக்கலாம். சமீபத்திய ஆராச்சியில் செவ்வாய் கிரகத்துல (Hydrogen) ஹைட்ரஜன் இருப்பதை உறுதி செய்து  இருக்கிறார்கள். இந்த நிகழ்வு செவ்வாய் கிரகம் மனிதர்களை அழைப்பது போல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

Can we colonize amazing Mars, Terraforming
Image courtesy Nasa

என்னதான் செவ்வாய் கிரகம் நம்மை வரவேற்றாலும், செவ்வாய் கிரகம் செல்வது அவ்வளவு எளிய காரியம் இல்லை, அதில் பல தொழில்நுட்ப சவால்கள்  உள்ளது. நம்ம பூமியும், செவ்வாய் கிரகமும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி  வருகின்றன. பூமியிலிருந்து ஒரு விண்கலத்தை செவ்வாய் நோக்கி அனுப்பும் போது சரியாக கணக்கு செய்து தான் அனுப்ப  வேண்டும், இந்த கணக்கீடுகள் அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.

Can we colonize amazing Mars

செவ்வாய் கோளானது 26 மாதங்களுக்கு ஒருமுறை நம்ம பூமிக்கு அருகில் வரும், அப்பொழுது கூட, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள தொலைவு 34 மில்லியன் மைல். இந்த தூரமானது பூமியிலிருந்து நிலவுக்குப் போகிற தூரம் போல 1500 மடங்கு தூரம்.

தோராயமாக 6 மாத காலம் எடுக்கும், பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் செல்வதற்கு. மறுபடியும் பூமிக்கு திரும்ப மற்றுமொரு 6 மாத காலம் எடுக்கும். இதில் உள்ள ஒரு பெரிய சிக்கல், எரிபொருள். விண்கலத்தில் உள்ள எரிபொருள் விண்கலம் ஏவும்போது மட்டுமே பயன்படும், வளிமண்டலத்தை விண்கலம் கடந்து விட்டால், வளிமண்டல அழுத்தத்தால் மட்டுமே விண்கலம் செவ்வாய் நோக்கி  செல்லும், இதற்கான காலம் ரொம்ப அதிகம்.

மோசமான ஆரோக்கியம் சார்ந்த விளைவுகள்

6மாதக் கால விண்வெளிப் பயணம் என்பது மோசமான ஆரோக்கியம் சார்ந்த இடர்களை சந்திக்க  நேரிடும், அண்ட கதிர்கள்(Cosmic Rays) மற்றும் சூரியக் கதிர்கள் மனிதர்களை தாக்கும். குறிப்பாக மூலையைத் தாக்கி, நினைவு மற்றும் கவனத்தை பாதிக்கும்.

அதி வேகமாக செல்லும் துணை அணுத்துகள்கள்(sub atomic particle), DNA வை உடைத்து கேன்சர் வருவதற்கான வாய்ப்பும் மற்ற நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

விண்வெளி பயணத்தில் உடல் எடை குறைவு என்பது சாதாரணமான  ஒன்று. ஆறு மாத விண்வெளிப் பயணத்தில் ஒருவரது எலும்பு நிறை (Bone mass) 1% லிருந்து 2% வரை ஒவ்வொரு மாதமும் குறைய ஆரம்பிக்கும். இது  மட்டுமில்லாமல், ஒருவரின் தசை நிறை (Muscle Mass) மற்றும் விசை (force) 50% குறையும். 40 வயது உள்ள ஒருவரின் வலிமை, அவர் செவ்வாய் கிரகம் சென்றதும் 80 வயதுள்ள வலிமை (Strength) மட்டுமே கிடைக்கும்.

இன்றளவும் செவ்வாய் கிரகம் செல்வது ஒரு மருத்துவ பரிசோதனை தானே தவிர, மக்களுக்கான போக்குவரத்தை பார்க்க முடியவில்லை. இரண்டு வருடம் செவ்வாய் கிரகத்தில் தங்கி  இருந்தாலும், இது ஒரு ஆராய்ச்சிக்கான முதல் படி தானே தவிர அங்கு வேறு ஒன்றும் செய்ய முடியாது.

வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை  இறங்கினாலும், நமது தேவைகளை நாம் தான் தேடிக்கொள்ள  வேண்டும், அங்கு ஒன்றுமே இருக்காது. தரை இறங்கியதும் நாம் சந்திக்கின்ற பெரிய சவால், உணவு, சுவாசிக்க காற்று. இரண்டுமே அங்கு சாத்தியம் இல்லாத ஒன்று.

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜென் சுத்தமாக இல்லை மாறாக அதிக அளவிலான கதிர் வீச்சு இந்த கிரகத்தில் உள்ளது. இந்த கிரகத்தில் உள்ள சிவப்பு மண், மின்னணு சாதனங்களை சேதப்படுத்தும் அளவுக்கு சக்தி  வாய்ந்தது. அந்த அளவுக்கு ஆபத்து உள்ள இந்த கிரகத்தில் எப்படி மனிதர்களை வாழ வைப்பது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள், கூடிய விரைவில் மனிதர்கள் வாழ்வதற்கான அணைத்து ஏற்பாடுகளும் அங்கே செய்யப்படும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்ட  பகுதி, எரிமலை உருகி வெளியேறிய குழாய்(Lava tubes), இதை ஒரு குகை போல பயன்படுத்த முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின்  கருத்து. இந்த குகை, கதிர்வீச்சு மற்றும் தூசியிலிருந்து நம்மை  பாதுகாக்கும்.

வாழ்வதற்கு குடிக்க நீர் வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நேரடியாக தண்ணீர் இல்லை, அனால் உறைந்த பனியை நுண்ணலை (microwave) செலுத்தி, பாறைகளை சூடாக்கி அதில் உள்ள தண்ணீரை பிரித்தெடுக்கும் முறை  உண்டு. இந்த நீரை பயன்படுத்தி செடி வளர்த்து அதன் மூலமாக வாழ்க்கை வாழ முடியும்.

இந்த முறையை செயல்படுத்த பெரிய அளவில் ஒரு ஆலை  உருவாக்கி, அதன் மூலம் கிடைக்கும் நீரை  குடிக்கவும், தாவரங்களை வளர்க்கவும் முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

செவ்வாய் கிரகம் பொறுத்த  வரைக்கும், இடத்திற்கு பஞ்சம் இல்லை, ஆள் இல்லாத கிரகம், சூரிய பலகை (Solar plant) மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி செடிகளுக்கு தேவையான சக்தியை பெற முடியும், இது செடி வளர  பெரிய அளவில் கை கொடுக்கும்.

மேலே சொன்ன எல்லாமே ஒரு கோட்பாடு தான், நடைமுறையில் பரிசோதனை செய்தால் மட்டுமே இதற்கான உண்மை தன்மை தெரிய வரும்.

Terraforming

இன்னொரு வழி பசுமையாக்குதல்(Terraforming), பூமி மாதிரியே செவ்வாய் கிரகத்தை மாற்றுவது. அதாவது செவ்வாய் கிரகத்தின் ரசாயனக் கலவையை மாற்றி, செவ்வாய் கிரகத்தை சூடு  படுத்துவது. இதனால் உறைந்த பனி உருகி நீராக  மாறும். குடிக்க நீர் மற்றும் சுவாசிக்க ஆக்சிஜென் இரண்டுமே கிடைக்கும். இந்த பசுமையாக்கம்(Terraforming) செய்ய நமக்கு தேவை சூரிய காத்தடிகள்.

Terraforming

இந்த சூரியக் காத்தடிகளை சரியான தூரத்தில் பறக்க விட்டால், சூரியக் கதிர்கள் இந்த காத்தடிகள் மீது பட்டு செவ்வாய் கிரகத்தில்  பிரதிபலிக்கும். செவ்வாய் கரத்தின் தென்துருவத்தில் அதிகப்படியான உறைந்த பனிக்கட்டிகள்(frozen carbon dioxide) உள்ளன, இது உருகி பசுமை வீடாக மாறும் (greenhouse effect). இந்த விளைவு, தேவையான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை கொடுக்கும்.

இதை எல்லாம் சரியாய் செய்து முடிக்க ஒரு ஐம்பது வருடங்கள் ஆகும். 2014இல் NASA அனுப்பிய ORION மற்றும் தனியார் நிறுவனமான TESLA வின் முயற்சிகள் கூடிய விரைவில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற வாய்ப்புகளை உருவாக்கும் என நம்பிக்கை தருகிறது.

Can We Colonize amazing Mars?

மனித முயற்சிக்கு மிக அருகில் உள்ள ஒரு தொலை தூரப்  பயணம் என்றால் அது செவ்வாய் கிரகப் பயணம் மட்டுமே,  எத்தனை பேர் இந்த பயணத்தில் போக முடியும் என்பது யாராலும் கணிக்க முடியாது, ஆனால் அது எட்டாத கனி இல்லை என்பது மட்டும் உண்மை. விரைவில் இந்த பயணம் முழுமை பெரும், மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடி ஏறுவார்கள்.

வீடியோ வடிவில் இந்த பாதியை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

Source : Is colonizing Mars even a good idea?

Related post : நாசாவின் சிறிய தவறால் பெரும் இழப்பு ஏற்பட்ட செயற்கை கோள்  விபத்து

நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.

ENaff i?offer id=6&file id=1399&aff id=82734

Spread the love

One thought on “Can we colonize amazing Mars in 2050? செவ்வாய் கிரகம் 2050இல் குடியேற முடியுமா?

Leave a Reply

Your email address will not be published.

error: Copying this Content is protected !!