International friendship Day 2021 : History all about Friendship Day
நண்பர்கள் நம் வாழ்க்கையில் ஒரு பெரிய பங்கு வகிக்கிறார்கள், இன்பம், துன்பம் என எதை எடுத்துக்கொண்டாலும், நண்பர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, நண்பர்கள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை. அந்த அளவுக்கு நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
International friendship day :
நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், நண்பர்களின் விலை மதிப்பற்ற சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதில் பெரிய பங்காற்றுகிறது.
2000 ஆண்டுக்கு முன்னர், கணினி வளர்ச்சி பெறாத போது, நண்பர்கள் நேரில் சென்று வாழ்த்து செலுத்தி வந்தனர், இன்றைய நவீன காலத்தில் வாட்ஸாப்ப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
இந்த கோவிட்-19 தோற்று காலத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
வரலாறு :
1958ஆம் ஆண்டு பராகுவே நாட்டில் முதன் முறையாக கொண்டாடப்பட்டது. 1930ஆம் ஆண்டு ஹால் அட்டைகளை(Hall Mark Card) நிறுவிய Joyce Hall என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த யோசனை, மக்கள் தங்கள் நட்பை கொண்டாடும் விதமாக அமையும் என்பது தான் Joyce Hall இவரின் எண்ணம்.
நட்பு என்பது ஒரு நபர் மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ளும் மிகவும் மகிழ்ச்சியான உறவுகளில் ஒன்றாகும். மற்ற எல்லா உறவுகளிலிருந்தும் நட்பு முழுவது வேறுபட்டது, நட்பு தூய்மையானது மற்றும் தெய்வீகமானது, மேலும் இனம், நிறம், சாதி மற்றும் மதத்தின் தடைகளை தாண்டி நிற்கிறது.
நட்பு ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது, ஏனெனில் குறிப்பிடத்தக்க பிணைப்பு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வாழ்வையும் தருகிறது, நட்பு ஒரு நம்பிக்கையின் துவக்கம். ஒரு நாள் கொண்டாட்டம் மூலம் நட்பை சுருக்கமாக சொல்ல முடியாது என்றாலும், நீங்கள் நீண்ட காலமாக பேசாத ஒரு நண்பரை இன்று அழைத்து பேசுங்கள், அன்பையும் இணைப்பையும் மீண்டும் உருவாக்குங்கள்.
இந்தியாவில் ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம் கொண்டாடப் படுகிறது. உலகின் பல பகுதிகளில் ஜூலை 30 உலக நண்பர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. மெக்ஸிகோ, வெண்ணின்சுலா மற்றும் பின்லாந்து நாட்டில் 14 பிப்ரவரி நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Source : United Nations
தமிழ் பழமொழிகளின் உண்மையான அர்த்தம்
நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.