World’s first computer, Alien Technology -1902 : உலகின் முதல் ஏலியன் கம்ப்யூட்டர்

World’s first computer, Alien Technology?

1902 ஆம் ஆண்டு கிரீக் நாட்டு கடல் அகழ்வாராய்ச்சியில் ஒரு உடைந்த கப்பல் கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த கப்பல் ரோமன் நாட்டுக்கு சொந்தமான கப்பல். அந்த கப்பலில் ஒரு உடைந்த மரப்பெட்டி கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த மரப்பெட்டியில் ஒரு பழமையான பொருளை கண்டு அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் மிகவும் வியப்படைகிறார்கள்.

அந்த பழமையான பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரால் அந்த பழமையான பொருள் அழைக்கப்பட்டது. “Antikythera” . இந்தப் பொருள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட பொருள்களை விட மிகவும் பழமையானது மற்றும் திகைப்பூட்டும் ஒரு பொருள்.

World's first computer, Alien Technology, Antikythera, ancient clock

Antikythera 

1902 ஆம் ஆண்டு இந்த Antikythera வைக் கண்டுபிடிக்கும் போது, மிகவும் துருப்பிடித்த நிலையில் கண்டு பிடிச்சிருக்காங்க. இந்த Antikythera வெண்கலத்தால் செய்யப்பெற்ற மிகவும் பழைய கருவி என்றும், இதன் காலம், கிபி 100 லிருந்து கிபி 205 வரை இருக்கும் என்று கார்பன் டேட்டிங் முறையில் தெரியவருகிறது.

World's first computer, Alien Technology: உலகின் முதல் ஏலியன் கம்ப்யூட்டர்
Source : Wikipedia

இந்த Antikythera mechanism கிரேக்க விஞ்சானிகளால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பதைத் தவிர வேற எந்த ஒரு விவரமும் அறியப்படாமல் கடந்த 100 ஆண்டுகளாக இருந்தது.

World’s first Computer  

இந்த கருவியில் சக்கரம் நெம்புகோல்(Gear) மற்றும் பலவித விஞ்சைகள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. உலகில் உள்ள பல விஞ்சானிகள்,

  • இது என்ன கருவி?
  • இதன் வேலை செய்யும் முறை என்ன? 
  • இதை யார் கண்டுபிடித்தது?

என பல கேள்விகள் அவர்கள் தினமும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அதற்கான விடை அவ்வளவு எளிதில் கிடைக்க  வில்லை. இந்த கருவியை பற்றிய தகவல்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு குறிப்பும் இல்லாமலே இருந்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்.

இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஏதென்ஸ் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களாக இந்த Antikythera பற்றிய ஆராய்ச்சி உலகம் முழுவதிலும் வேகம் எடுக்கிறது.

உலகில் உள்ள பல்வேறு  ஆராய்ச்சியாளர்கள் இந்த கருவியை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்  படுகிறார்கள். அதி நவீன தொழில்நுட்பம் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்  படுகிறது. இந்தக் கருவியில் அப்படி என்ன தொழிநுட்பம் உள்ளது என்பது தான் அனைவரின் கேள்வி மற்றும் வியப்பும் கூட.

இந்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஒரு சிரமத்தை  சந்திக்கிறார்கள், இந்த அளவு பழமையான மிகவும் துரு பிடித்த, ஒரு புராதன சின்னமான இந்த Antikythera mechanism கருவியை கழற்றவோ அல்லது அந்த கருவிக்குள் என்ன உள்ளது என்பதை அவர்களால் சிறிதும் விளக்கவோ முடியவில்லை.

உயர் தொழில்நுட்ப X-Ray கருவி 

இத்தனை சிரமம் கொண்ட இந்த கருவியை உயர் தொழில்நுட்பம் கொண்ட X-Ray கொண்டு இதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராயலாம் என  ஆராய்ச்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப் படுகிறது.

அங்கே மற்றுமொரு பெரிய சவாலை ஆராய்ச்சியாளர்கள் சந்திக்கிறார்கள், உலகிலேயே இது போன்ற ஒரு அறிய பொக்கிஷம், புராதனச் சின்னம், வெண்கலத்தால் ஆனா ஒரு அற்புதமான கருவியை ஊடுகதிர் (Scan) செய்யும் கருவி, உலகிலேயே ஒன்றே ஒன்று தான் உள்ளது.

World's first computer, Alien Technology, Antikythera, ancient clock

அந்த X-Ray கருவி, இங்கிலாந்து நாட்டில் உள்ளது, ஏதென்ஸ் லிருந்து இங்கிலாந்து சுமார் 3000கிலோ மீட்டர். இந்த அளவு பழமையான கருவியை 3000 கிலோ மீட்டர் கொண்டு செல்வது சிறந்த திட்டம் இல்லை என கை விடுகிறார்கள்.

மாறாக, அந்த X-Ray கருவியை ஏதென்ஸ் நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த மிகப்பெரிய கருவியை பெரும் பொருள் செலவு செய்து இங்கிலாந்தில் இருந்து ஏதென்ஸ் நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

World's first computer, Alien Technology, Antikythera, ancient clock

இந்த மிகப்பெரிய X-Ray கருவியைக் கொண்டு Antikythera mechanism கருவியை  ஆராய்ந்ததில், ஆராய்ச்சியாளர்கள் தங்களின் புருவத்தை உயர்த்தி வியப்புடன் இருந்தார்கள். இந்த கருவியில் பயன்படுத்தப் பட்ட தொழில்நுட்பம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமே இல்லை, அந்த அளவு அதி நவீன தொழில்நுட்பம் எப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியம்?

கடிகார அமைப்பு கொண்ட இந்த Antikythera கருவியில் 37 கியர் சக்கரம் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு  அளவுகளில், கியர் சக்கரங்களில் உள்ள ஒவ்வொரு பற்களும் துல்லியமான தரத்தை கொண்டதாகவும், பற்களின் எண்ணிக்கை முதன்மை எண்களை (Prime number) கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்துள்ளனர். 

செவ்வாய் கிரகம் பற்றிய ஒரு அறிய தொகுப்பு 

World’s first computer – Analogue computer 

இந்த அளவு உயர் தொழில்நுட்பம் கொண்ட ஒரு கருவி, உலகின் முதல் அனலாக் கணினி(Analogue computer) தான் இந்த Antikythera mechanism. 2000 ஆண்டுக்கு(Year 2000) பிறகு தான் கணினி பற்றிய விழிப்புணர்வு உலகெங்கிலும் பரவத் தொடங்கியது. 

2000 ஆண்டுகளுக்கு முன்பு உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கணினி எதற்குப் பயன்படுத்தப் பட்டது என்றால், மெட்டோனிக் காலண்டர் (Metonic Calendar) என்று சொல்லக் கூடிய 19 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரன் வரும் அதே நாள், சூரிய கிரகணம் கணிப்பதற்கு மற்றும் பழமையான ஒலிம்பிக் விளையாட்டின் நேரத்தை கணிப்பதற்கு இந்த Antikythera கருவி பயன்பட்டது.

World's first computer, Alien Technology, Antikythera, ancient clock
Image Credit @wikipedia

உலகின் முதல் இயந்திர கணினி கண்டு பிடிக்கப்பட்டது, 14ஆம் நூற்றாண்டில், அதன் அளவு ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். ஆனால் இந்த Antikythera கருவி பொறுத்தவரை, மிகவும் சிறிய அளவில் உள்ளது. இந்த அளவு சிறிய வடிவமுள்ள கியர் அமைப்பு கொண்ட கணினியை 2000 ஆண்டுகளுக்கு முன் எப்படி கிரீக் அறிவியலாளர்கள் உருவாக்கினார்கள் என்பதற்கு இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லை. இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கருவி ஒரு மிகப்பெரிய புதிர்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், இந்த கருவியில் உள்ள சக்கரம்(Gear) சூரியன், சந்திரன் மற்றும் மற்ற கிரகங்களின் நகர்வை மிகத் துல்லியமாக கணக்கிட இந்த கருவி பயன்படுத்தப் பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Alien  Technology 

இந்த தொழில்நுட்பம் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து உருவாக்க முடியுமா என்றால், மிகப்பெரிய கேள்விக் குறி மட்டுமே மிஞ்சும். வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கருவி வேற்று கிரக வாசிகள் என்று சொல்லக் கூடிய ஏலியன் (Alien) உருவாக்கிய, அவர்கள் பயன்படுத்திய கருவி அப்படி இல்லையென்றால், அவர்கள் மனிதர்களுக்கு கொடுத்த கருவியாக இருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். 

World's first computer, Alien Technology, Antikythera, ancient clock
Image Credit @wikipedia

World’s first computer, Alien Technology: உலகின் முதல் ஏலியன் கம்ப்யூட்டர் வீடியோ வடிவில் காண இந்த லிங்க் கிளிக் செய்யவும். 

நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.

Dividend

Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Copying this Content is protected !!