Advantage of long term investing in 2021? நீண்ட கால முதலீடு நன்மைகள்.

Advantage of long term investing | நீண்ட கால முதலீடு நன்மைகள் என்ன?

நீண்ட கால முதலீடு(Long Term investment), உங்கள் சேமிப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சிறியதாக இருந்தாலும், உங்கள் சேமிப்பின் வளர்ச்சி திறனை அதிகரிக்க முக்கியமானது. 

எப்பொழுதும் மற்றவர்களின் அறிவுறுத்தலின் பேரிலோ அல்லது டிஜிட்டல் தொழில்நுட்ப தளங்களின் முடிவுகளை மட்டுமே வைத்து முதலீடு செய்யக் கூடாது.

உண்மையில், நீங்கள் முதலீட்டு உலகில் நுழைய முடிவு செய்தால், நீண்ட காலத்திற்கு அதில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல ஆண்டுகளுக்கு உங்கள் முதலீடுகளுடன்இருப்பது பல நன்மைகளை  தருகிறது – நீண்ட கால முதலீட்டின் ஐந்து நன்மைகள் இங்கே தர உள்ளேன்.

நீண்ட கால முதலீடு நன்மைகள்

சந்தை ஏற்ற இறக்கங்களை கணிக்க உதவும்  

ஒருவர் புதிதாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அவர் தனது முதல் சந்தை வீழ்ச்சியை சந்தித்தால், அது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் முதல் உள்ளுணர்வு உங்கள் முதலீடுகளை விற்க சொல்லும். இது உங்களுக்கு உண்மையான இழப்புகளை ஏற்படுத்தும். கடினமான நேரங்களில் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் முதலீடு சற்றே கீழே செல்வதை  தான் நீங்கள் பார்ப்பீர்கள், மேலும் சந்தை மீண்டும் உயரும் போது இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் உயரக்கூடும். சந்தை எப்பொழுதும் ஏற்ற இறக்கத்தில் தான் வர்த்தகம் செய்யும்.

1987 அக்டோபரில் டவ் ஜோன்ஸ்(Dow Jones) பங்கு அதன் மதிப்பில் 22% க்கும் அதிகமாக இழந்த போது, பங்குச் சந்தை வரலாற்றில் இதை கருப்பு திங்கள்(Black Monday) என்று அழைத்தார்கள். பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை விற்று வெளியேறினார்கள், ஆனால் தங்கள் முதலீட்டில் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றும் பெரிய நிறுவனங்களில் தங்கள் பங்குகளை முதலீடு செய்தவர்கள், 1988 இல் 16.6% மற்றும் 1989 இல் 31.7% மொத்த வருமானத்துடன் வெகுமதி பெற்றனர் – இது, வரலாற்றில் மிகவும் கடுமையான வீழ்ச்சிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது!

பங்கு சந்தை ஏற்ற இறக்கம் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வு, இதை கையாள்வதற்கு நீண்ட கால முதலீடுகளே சிறந்த வழி. சந்தை புள்ளிகள் கீழே இறங்கும் போது நீண்ட கால முதலீடுகள் நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. 

NSE மற்றும் BSE இல் பல பங்குகள் மிகவும் மோசமான சந்தை நிலவரங்களில்(2007 & 2020) முதலீட்டார்களுக்கு எந்த ஒரு பெரிய ஏமாற்றத்தையும் கொடுக்காமல் வர்த்தகம் நடைபெற்றது. நாம் கவனம் செலுத்த வேண்டியது நாம் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எந்த சந்தை வீழ்ச்சியையும் தாங்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். சந்தை மறுபடியும் தனது நிலைக்கு முன்னேற ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம், அனால் அவை நமக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Lessons from black monday 

நீண்ட கால முதலீடு, பணத்தை பங்கு சந்தையில் வளர நேரம் கொடுக்கிறது.

நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்தீர்களோ, அவ்வளவு காலம் உங்கள் பணம், சந்தையில் நீங்கள் முதலீடு செய்த நிறுவனம் வளரும் அதே வேகத்தில் வளரும். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நீங்கள் மாதங்களில் கணிக்க முடியாது, குறைந்தது ஒரு ஆண்டு எடுக்கும். பொறுமை மிகவும் முக்கியம்.

Related Topic : நீண்ட கால பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

கூட்டு வருவாய் எவ்வாறு வேலை செய்கிறது?

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, நமது நீண்ட கால முதலீடு, ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக கூட்டு வருமானமாக மாறும். காந்தத்தில் சேரும் இரும்பு காலம் செல்ல செல்ல அதன் சக்தியால் அதிக இரும்பினை சேர்ப்பது போல, நமது சிறு முதலீடு காலத்தால் நமக்கு பெரிய அளவு கூட்டு வருமானமாக திரும்ப கிடைக்கும். 

கூட்டு வருமானத்தின் ஒரு உதாரணம் இங்கே:

செல்வம் 10,000 ரூபாய் முதலீடு செய்து இந்த முதலீட்டில் 5% டிவிடென்ட் சம்பாதிக்கிறார். முதல் ஆண்டில், செல்வம் 500Rs  சம்பாதிக்கிறார், இது அவரது நிதியில் மீண்டும் செலுத்தப்படுகிறது. இரண்டாம் ஆண்டு, செல்வம் 525Rs டிவிடென்ட் திரும்பப் பெருகிறார்.

ஏனெனில் அவர் தனது ஆரம்ப 10,000 ரூபாயில் ஒரு வருவாயை ஈட்டியது மட்டுமல்லாமல், முந்தைய ஆண்டில் அவர் சம்பாதித்த 500Rs(டிவிடென்ட்)  மீதும் வருவாயை ஈட்டுகிறார். பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் இது தொடர்வதால் கூட்டு வருமானம் மூலம், செல்வம் தனது பணத்தை சம்பாதிக்கிறார். டிவிடென்ட் மட்டும் இல்லாமல் அவரது பங்கும் சேர்ந்தே வளர்கிறது.

Advantage of long term investing, நீண்ட கால முதலீடு நன்மைகள்m long term investment, investment

நீண்ட கால முதலீடுகளுக்கு குறைந்த வர்த்தக கட்டணம்: 

நீங்கள் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் வர்த்தக கட்டணம் செலுத்துவீர்கள், எனவே நீங்கள் ஒவ்வொரு முறை வாங்கி விற்கும்பொழுது நீங்கள் வர்த்தக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முதலீட்டாளர் வர்த்தகக் கட்டணங்களில் எவ்வளவு அதிகமாக செலுத்துகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் தங்களது வருமானத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்(Return from equity). பல ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தால், இந்தக் கட்டணங்களை குறைந்தபட்சமாக வைத்திருக்கவும், உங்கள் வருமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்.

நீண்ட கால முதலீடு மிகவும் சுலபமானது:

உங்களுக்கு அசாதாரண வர்த்தக திறன்கள் அல்லது மிகவும் நிதி அறிவு இருக்க வேண்டுமென்று எந்த ஒரு அவசியமும் இல்லை  – உங்களுக்கு மிகவும் பொறுமை மற்றும் உங்கள் வருமானத்தை பெருக்கும் திறன் கொண்ட சிறந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த நீண்ட கால முதலீடுகள் பெரிதும் உதவுகிறது:

நீண்ட கால முதலீடுகள் (long term investment) செய்யும் பொழுது, சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு நீங்கள் உணர்ச்சி வசப்படாமல், பொறுமையுடன் இருந்தால், ஓரிரு வாரங்களில் உங்கள் முதலீடு பழைய நிலைக்கும் அதிகமாக மாறும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சந்தையில் இருந்து வெளியேறினால், நீங்கள், உங்கள் முதலீட்டை (investment) இழக்க நேரிடும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெல்வதே சிறந்த முதலீடர்களுக்கு ஒரு உதாரணம். 

இது ஒரு நீண்ட கால அணுகுமுறை :

நீண்ட கால முதலீடு பல நன்மைகளுடன் வருகிறது மற்றும் புள்ளிவிவரங்கள் எப்பொழுதும் முதலீடுகளை ஏமாற்றுவதில்லை. உங்களின் சிறிய முதலீடு நீண்டக கால முதலீட்டில் பெரிய ஒரு வருமானமாக மாறும்.

சில முதலீடுகள், உங்கள் முதலீட்டு மதிப்பை காட்டிலும் கீழே செல்லலாம், சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்வது உங்களின் தலையாய கடமை. 

ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Investing Vs Trading

நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.

ENaff i?offer id=6&file id=1399&aff id=82734

Spread the love

One thought on “Advantage of long term investing in 2021? நீண்ட கால முதலீடு நன்மைகள்.

Leave a Reply

Your email address will not be published.

error: Copying this Content is protected !!