Advantage of long-term investment
2017 ஆம் ஆண்டு ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நேரலையில் ரவி என்பவரின் தொலைபேசி அழைப்பு பலரை வியப்பில் ஆழ்த்தியது. தனது தாத்தா வாங்கிய 20,000 MRF பங்குகள் பற்றிய அவரின் தொலைபேசி பலரின் தூக்கத்தை தொலைத்தது.
MRF
1990 ஆம் ஆண்டு ரவியின் தாத்தா 20,000 MRF பங்குகளை வாங்கியுள்ளார், ஒரு MRF பங்கின் விலை, 1993இல் 11ருபாய். 1990இல் இந்த பங்கின் விலை என்னவென்று சரியான தரவு இல்லை. 1993இல் இருந்து தான் இதன் விலை நிலவரம் நமக்கு உள்ளது.
தோராயமாக 220,000 ரூபாய்க்கு 20000 பங்குகளை அவர் 1990இல் வாங்கி இருந்தார், இன்றைய தேதியில்(82168 ஒரு பங்கின் விலை), 164 கோடியை தாண்டும். வீடியோ லிங்க்
நம்ம எல்லாருக்குமே ஒரு கனவு இருக்கும், எப்படியாவது நன்றாக உழைத்து, பெரிய பணக்காரனாக மாற வேண்டுமென்று. அனால் அதற்கு சரியான வழிகாட்டி இல்லாமல் வெறுமனே உழைத்துக் கொண்டே இருக்கிறோம். நமது உழைப்பின் சிறிய பகுதியை எப்படி முதலீடு செய்தால், வருங்காலத்தில் நமது சொத்து மதிப்பை அதிகரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாமலே இருக்கிறது.
மேலே உள்ள சார்ட் 2002லிருந்து 2021 வரை கொடுக்கப்பட்டுள்ளது, இந்த காலகட்டத்தில் இந்த பங்கு எவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் நடைபெற்றது என்பதை காட்டுகிறது. 2007~2008 இல் நடந்த பொருளாதார வீழிச்சியில் இந்த பங்கு சற்றே தடுமாறி, பின்னர் தனது நிலையான முன்னேற்றத்தால் 80,000 ருபாய்க்கும் மேல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
Advantage for holding long-term
சில நேரங்களில் நாம் வாங்கும் பங்குகளை மறந்து விட வேண்டும், இது அந்த நிறுவனத்தின் அடிப்படை தரவுகளை பொறுத்தது. MRF பங்கை பொறுத்த வரை தோராயமாக ஆண்டுக்கு 240%, 31 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து 2003 லிருந்து 2021இல் இதன் விலை பல கோடியாக மாறியுள்ளது. இதே விதி அனைத்து பங்குகளுக்கும் பொருந்தாது.
MRF பங்குகள் split / Bonus போன்ற எந்த ஒரு லாபத்தையும் பங்குதாரர்களுக்கு பிரித்து அளிக்காமல், பங்கின் விலை(EPS) உயர்வுக்கு அதன் லாபத்தை உயர்த்தி இருக்கிறது. இதுவும் ஒரு விதத்தில் மிகவும் நல்ல முதலீடு நீண்ட காலத்திற்கு. மாறாக சில பங்குகள் எதிர்மறை வருமானத்தையும் நீண்ட காலத்திற்கு அளித்திருக்கிறது(Negative growth).
MRF மட்டுமல்லாமல், சந்தையில் பல நிறுவங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. Ashok Leyland பங்கின் விலை 2012இல் 20ரூபாயாக இருந்தது, இன்று அதன் விலை 132 ஆக(560%) வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது. TVS Motors பங்கின் விலை 2012இல் 42ரூபாயாக இருந்தது, இன்று அதன் விலை 579ரூபாயாக மாறியுள்ளது(1279%).
சிறிய முதலீடு / நாம் தவறவிட்ட முதலீடு
2012 இல், ஒருவர் 42,000Rs TVS Motors இல் முதலீடு செய்து இருந்தால் 537,000 ரூபாய்க்கு அவரின் முதலீடு இன்று மாறி இருக்கும். இந்த முதலீடு ஒரே தவணையில் நீங்கள் வாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறுது சிறிதாக நீங்கள் முதலீடு செய்து இருந்தாலே போதும்.
இது மிகவும் சிறிய உதாரணம், நாம் தவறவிட்ட முதலீடுகள் 10 வருடங்களில் பல லட்சங்களை தாண்டி உள்ளது. நீங்கள் முதலீடு என்றதும் பல ஆயிரங்களில் துவங்க வேண்டுமென்று அர்த்தமில்லை. 2012இல் நீங்கள் மாதம் 100 லிருந்து 200 ருபாய் வரை முதலீடு செய்து இருந்தாலே போதும், அன்றைய தேதியில் அது பெரிய தொகை இல்லை.
நாம் தவறவிட்ட முதலீடுகளை பற்றி பேசி எந்த பலனும் இல்லை. இன்றைய தேதியில் நீங்கள் மாதம் 1000 முதல் 2000 வரை முதலீடு செய்யத் துவங்கினாலே போதும், நமது தலைமுறையில் முதலீட்டின் கூட்டு வருமானத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
இன்றைய முதலீடு, நாளைய வளர்ச்சி, முதலீடுகளை தள்ளிப் போடாமல் இன்றே துவங்குங்கள். சிறந்த நிறுவனத்தில் உங்கள் முதலீடுகளை துவங்குங்கள், சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உங்கள் முதலீடுகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Subscribe to my newsletter : Share market information in Tamil
Related post : Dividend stock vs Growth Stock
ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.