Dividend Stock Vs Growth Stock
முதலீட்டாளர்கள் பங்குகளை தேர்ந்தெடுக்க பல அளவீடுகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் சில வணிக நடைமுறைகளை(Business practice) அடிப்படையாக கொண்டு முதலீடு செய்கின்றனர் மற்றவர்கள் விலை மாற்றங்கள் மற்றும் தற்போதய தொழில்நுட்ப அடிப்படையில் சிறந்து விளங்கும் பங்குகளில் முதலீடு செய்யின்றனர்.
பொதுவாக உங்கள் முதலீட்டை டிவிடென்ட் அல்லது வளர்ச்சி பங்குகளில் முதலீடு செய்வது உங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும். ஒரு டிவிடென்ட் பங்கில், நீங்கள் ஒரு நிலையான வருமானத்தை எதிர்பார்க்க முடியும்(குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறை). ஒரு வளர்ச்சி பங்கு என்பது, விலை அதிகரிப்பு(Increase in Share price ) மற்றும் அடுத்தடுத்த பங்கின் விலை உயர்வு(capital gain) மூலம் நீங்கள் உங்கள் முதலீட்டை உயர்த்துவது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
இது போன்ற கட்டுரைகளைப் படிப்பது உங்கள் பணத்தைப் பற்றி நல்ல முடிவுகளை எடுக்க உங்களைத் தயார்படுத்தலாம், ஆனால் நீங்கள் முதலீடு செய்யும் பங்கை பற்றிய முழு விவரமும் அறிந்து அதில் முதலீடு செய்யுங்கள்.
Dividend Stocks – டிவிடென்ட் பங்குகள் என்றால் என்ன?
டிவிடென்ட் பங்குகள் மற்றும் வளர்ச்சி பங்குகள் இடையே வேறுபாடு நீங்கள் ஒவ்வொரு பங்குகளில் வளர்ச்சியையும் எவ்வவாறு பார்க்குறீர்கள் என்பது? டிவிடென்ட் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கும் நிறுவங்களும் உள்ளன, சில நிறுவனங்கள் வருத்தத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கும். நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை டிவிடென்ட் மூலம் பங்குதாரர்களுக்கு வழங்கும்.
வளர்ச்சி பங்குகள் இவ்வாறு டிவிடெண்ட் வழங்குவதில்லை, மாறாக ஒரு பங்கின் விலை ஒரு குறிப்பிட்ட அளவு உயரும், இதனால் பங்குதாரரின் முதலீடு அதை அளவு உயருகிறது.
ஒரு டிவிடென்ட் பங்கு உங்கள் பங்கின் விலையை உயர்த்தாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நிலையான வருமானத்தை பேருக்கும் ஒரு பங்கு. இதை நீங்கள் விற்கும் போது, உங்கள் முதலீடு மற்றும் அதற்கான டிவிடென்ட் சேர்ந்தே உங்களுக்கு திரும்ப கிடைக்கிறது.
டிவிடென்ட் பங்குகள் அந்த நிறுவனத்தின் முடிவுகள் சார்ந்த ஒன்று, டிவிடென்ட் எப்பொழுதும் ஓரே சதவிகிதமாக இருப்பதில்லை, இது அந்த நிறுவனத்தின் லாபத்தை பொறுத்து மாறுபடும். அதே நேரம் நிறுவனம் தனது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு டிவிடென்ட் வழங்குவதில்லை. இது அந்த நிறுவனத்தின் கொள்கை முடிவுகளை சார்ந்தது.
நீங்கள் டிவிடென்ட் சார்ந்த பங்குகளை உங்கள் முதலீட்டில் கொண்டு வரும் போது, டிவிடென்ட் தரும் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை ஆராய வேண்டும், அந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக டிவிடென்ட் தருகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முதலீட்டில் டிவிடென்ட் சார்ந்த பங்குகளை மட்டுமே வைத்துக் கொள்ளாமல், சிறிது வளர்ச்சி சார்ந்த பங்குகளை சேர்த்துக் கொள்வது உங்கள் முதலீட்டின் ஆபத்தைக் குறைக்கும்.
நீங்கள் டிவிடென்ட் பங்குகளில் நிலையான வருமானத்தை பெற்றால், அவற்றை எவ்வாறாக பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். டிவிடென்ட் பணத்தை மீண்டும் சந்தையில் முதலீடு செய்யும் பலர் தங்களது முதலீட்டில் பெரிய மாற்றத்தை காண்கிறார்கள். டிவிடென்ட் பங்குகளின் விலை பல சமயங்களில் அதே விலையில் வர்த்தகம் செய்யப்படும், அதன் லாபம் டிவிடென்ட் முறையில் வழங்கப்படுவதால், பங்கின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது.
வளர்ச்சி பங்குகள் என்ன?
ஒரு வளர்ச்சி பங்கு(Growth share) நீங்கள் வேறு எந்த ஒரு விஷயத்தையும் கருத்தில் கொள்ளாமல், பங்கு விலை வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வாங்கும் ஒரு பங்காகும். ஒரு முதலீட்டாளராக, எதிர்காலத்தில் உங்கள் பங்குகளை விற்பதன் மூலம் உங்கள் பணத்தை அதிகமாக்க திட்டமிட்டுள்ளீர்கள். இந்த இலாப வடிவம் மூலதன ஆதாயங்கள்(Capital gain) என்று அழைக்கப்படுகிறது. உங்கள் பங்கு நிறுவனம் சில டிவிடென்ட்களை வழங்கினால் அது ஒரு நல்ல ஊக்கத்தொகை (Bonus) , ஆனால் உங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பங்கு விலை வளர்ச்சியை ஆதாயமாக கொண்டது.
ஒரு வளர்ச்சி பங்கு நிறுவனம், தனது எல்லா இலாபங்களையும் மறுமுதலீடு செய்ய தேர்வு செய்யும். இதைச் செய்வதன் மூலம் அது முதலீட்டாளர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய பணத்தை தான் கொடுக்கிறது, எனவே டிவிடென்ட்கள் குறைவாக இருக்கும். எனினும், இந்த மறுமுதலீடு காலப்போக்கில் வணிகத்தின் மதிப்பை வளர்க்க முனைகிறது.
இது, நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கிறது. நீங்கள் வளர்ச்சி பங்குகளை தேர்வு செய்யும் போது, இதன் பொருள் காலப்போக்கில் உங்களின் பங்கு மதிப்பு உயரும் ஒரு போர்ட்போலியோவை உருவாக்குகிறீர்கள்.
நீங்கள் சில டிவிடென்ட்பங்குகளுடன், வளர்ச்சி பங்குகளை பன்முகப்படுத்த(Diversified) வேண்டும், ஆனால் உங்கள் முதலீடுகளில் பெரும்பாலானவை தங்கள் இலாபங்களை மீண்டும் முதலீடு செய்யும் நிறுவனங்களை வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
பல முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தை(Dividend) தங்கள் போர்ட்ஃபோலியோக்களில் மீண்டும் முதலீடு செய்கிறார்கள், ஒரு புதிய பங்கு வாங்க பணத்தைப் பயன்படுத்துகிறார்கள், இது எதிர்கால ஆதாயங்களை(Benefits) எதிர்பார்த்து முதலீடு செய்கிறார்கள்.
நீங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் டிவிடென்ட் பங்குகளா அல்லது வளர்ச்சிப் பங்குகளா?
ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் சொந்த தேவைகளை தீர்மானிக்க ஒரு பங்கை வாங்கவேண்டி இருந்தாலும், அந்த பங்கு டிவிடென்ட் மற்றும் வளர்ச்சிப் பங்குகள் இரண்டையும் ஓரளவுக்கு பூர்த்தி செய்யும். நீண்ட கால முதலீட்டாளர்கள் மட்டுமே வளர்ச்சி மற்றும் டிவிடென்ட் பங்குகளில் பெரிதும் முதலீடு செய்கிறார்கள்.
இடர்(Risk)
வளர்ச்சி பங்குகள் டிவிடென்ட் பங்குகளை விட அதிக ஆபத்தானதாக இருக்கும். ஒரு வளர்ச்சி பங்கு நீங்கள் விலை குறைவாக உள்ளபோது வாங்கவும் விலை அதிகமாகும் போது விற்கவும் முயற்சிப்பீர்கள். நீங்கள் அந்த நிறுவனத்தை சரியாக ஆராயாமல் முதலீடு செய்தால், லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். டிவிடென்ட் பங்குகள் வளர்ச்சி பங்குகளை விட குறைந்த அளவு ஆபத்தானதாக இருக்கும். டிவிடென்ட் செலுத்தும் நிறுவனங்கள் நன்கு நிறுவப்பட்டவை, எனவே அவற்றின் பணம் நிலையானதாகவும் நம்பகமானதாகவும் இருக்கும். ஆனால் டிவிடென்ட் மதிப்பு, வளர்ச்சி பங்குகளின் லாபத்தை(capital gains) விட சிறியதாக இருக்கும், மேலும் அவற்றை மறுமுதலீடு செய்வதற்கு பதிலாக அவர்களின் இலாபங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த நிறுவனங்கள் பங்கு விலை உயர்வை குறைக்கின்றன. நீங்கள் பொதுவாக வளர்ச்சி பங்குகள் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் அதே அளவுக்கு ஆபத்தும் உண்டு.
பணப்புழக்கம்
சிறந்த டிவிடென்ட் பங்குகள் தங்களின் லாபத்தை சரியான இடைவெளிகளில், பங்குதாரர்களுக்கு வருமானத்தை வழங்குகின்றன. மேலே குறிப்பிட்டபடி, பெரும்பாலான நிறுவனங்கள் காலாண்டு , அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை டிவிடென்ட் செலுத்துகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் இதே போன்ற டிவிடென்ட் கொடுக்க முயற்சி செய்கின்றன, அல்லது குறைந்தபட்சம் ஒரு அடிப்படை அளவீட்டின் படி தங்கள் டிவிடென்ட் தொகையை கொடுக்க முயற்சிக்கின்றன.
வளர்ச்சி பங்குகள், டிவிடென்ட் பங்குகள் போல சீரான இடைவெளிகளில் முதலீடர்களுக்கு வருமானத்தை கொடுப்பதில்லை. நீங்கள் வாங்கும் பங்கை விற்றால் மட்டுமே நீங்கள் உங்களின் லாபத்தை பார்க்க முடியும். இந்த பங்குகளின் விலை நீங்கள் நினைக்கும் விலைக்கு எப்பொழுது வரும் என்பதை, யாராலும் கணிக்க முடியாது. சந்தை நிலவரங்களை பொறுத்து இந்த விலை மாறுபடும். இதனால், உங்கள் பணம் சந்தையில் வாங்குதல் மற்றும் பங்கு விற்பனை இதற்கு இடையில் சிக்கிக் கொள்ளும்.
நேரம்
வளர்ச்சி பங்குகள் முதலீட்டின் நீண்ட கால மாதிரியாக இருக்கும். நீங்கள் பல மாதங்களுக்கு உங்கள் பங்குகளை வைத்திருப்பீர்கள் அல்லது பல ஆண்டுகள் கூட ஆகலாம். நீங்கள் உங்கள் பங்கை விற்கும் பொது தான் அதன் மதிப்பைப் பெறுவீர்கள். இது வலுவான ஆதாயங்களுக்கு வழிவகுக்கும், ஆனால் நீங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோமற்றும் உங்கள் பணப்புழக்கத்தை திட்டமிட வேண்டும். டிவிடென்ட் முதலீடு முதலீட்டின் குறுகிய கால மாதிரியாக இருக்கும். நீங்கள் அதன் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்காக (Capital gain)டிவிடென்ட் பங்குகளை வர்த்தகம் செய்யவில்லை என்பதால், இந்த முதலீடுகளில் இருந்து நீங்கள் எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும்.
எந்த பங்கு சிறந்தது?
டிவிடென்ட் பங்குகள் என்பது நிறுவனத்தின் இலாபங்களின் அடிப்படையில் உங்களுக்கு நிலையான வருவாய் விகிதத்தை வழங்கும் பங்குகள் ஆகும். பங்கு விலை மதிப்பு அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட வருமானத்துடன், வளர்ச்சி பங்குகள் மூலதன ஆதாயங்களை தருகின்றன. நீங்கள் இடைக்கால வருமானத்தை பெற வேண்டுமென்றால், டிவிடென்ட் பங்குகளை தேர்ந்தெடுக்கலாம். உங்களக்கு உங்கள் பங்குகள் வருடக் கணக்கில் சந்தையில் முதலீடு செய்ய பொறுமை இருந்தால், நீங்கள் வளர்ச்சி பங்கில் முதலீடு செய்யலாம். நிறுவனத்தின் அடிப்படை தரவு, புள்ளி விவரங்கள் மற்றும் நிதி நிலைகளை ஆராய்ந்த பின்பு முதலீடு செய்யுங்கள்.
முதலீட்டு குறிப்புகள்
பங்கு முதலீடு என்று வரும்போது மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று உங்கள் கால வரையறை என்ன. நீங்கள் குறுகிய கால இலாபங்கள் அல்லது நீண்ட கால லாபங்களை தேடுகிறீர்களா? உங்களுக்கு பணப்புழக்கம் தேவையா, அல்லது உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முடியுமா? இந்த கேள்விகளை நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள், உங்களின் பதில் உங்கள் பங்குகளை நிர்ணயம் செய்யும்.
Related Post : ROCE மற்றும் ROE பற்றிய விளக்கம்
Source : Smart Asset