Fundamental analysis and technical analysis :
பங்கு சந்தையில் நாம் முதலீடு செய்வதன் முக்கிய நோக்கமே அதிக வருவாயை உருவாக்குவதே, நாம் முதலீடு செய்யும் பங்கின் விலை எதிர்காலத்தில் உயரும் என எதிர்பார்த்து முதலீடு செய்கிறோம். ஏதாவது பங்கு வீழ்ச்சி அடைந்தாலோ அல்லது நகராமல் அதே விலையில் வர்த்தகம் செய்யப்பட்டாலோ முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை, விற்க நினைப்பார்கள்.
பங்கின் விலை உயர்வு மற்றும் வாங்குவது விற்பது உள்ளிட்ட தரவுகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் முறை அடிப்படை பகுப்பாய்வு (Fundamental analysis – FA) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical analysis-TA).
Fundamental Analysis : அடிப்படை பகுப்பாய்வு
ஒரு பங்கு வளர்ச்சியை அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை, லாபம், பங்கு மீதான வருவாய், நிதி நிலைமை மற்றும் சொத்துக்கள் போன்ற நிதி நிலை விவரங்களை ஆராய்வது. நிறுவனத்தின் நிதி நிலைமை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) போன்ற விவரங்களையும் அறிவது. நிறுவனத்தின் லாபம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஓராண்டுக்கு எந்த அளவுக்கு வரிகள் போக லாபம் ஈன்றது என்பது மிகவும் முக்கியம்.
ஒரு நிறுவனத்தின் வளரச்சி தொடர்ச்சியாக இருப்பது, நீண்ட கால முதலீடுகளுக்கு சிறந்தது. குறைந்தது 3 ஆண்டு நிறுவனத்தின் நிதி நிலைமை, லாபம்(EBIT-Earning Before Tax and Interest & PAT – Profit After Tax) இவற்றை தெளிவாக ஆராய்வது மிகவும் நல்லது.
Technical Analysis : தொழில்நுட்ப பகுப்பாய்வு
தொழில்நுட்ப பகுப்பாய்வு என்பது, அடிப்படை ஆய்விலிருந்து வேறுபடுகிறது. TAவை பொறுத்த வரை, புள்ளி விவரங்கள், பங்கின் விலை மற்றும் அளவு (Volume) இவற்றின் நகர்வை பொறுத்து இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது. FA வில் நிறுவனம் மோசமான நிலைமையில் இருந்தாலும், TA சிறப்பாக இருந்தால் குறிகிய கால முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வார்கள்.
எளிய சராசரி நகர்வு (Slow Moving Average – SMA) மற்றும் அதிவேக சராசரி நகர்வு (Exponential Moving Average – EMA) இந்த இரண்டு அளவீடுகள் Technical Analysis முறையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு முறை. ஒரு பங்கின் விலை 50 நாட்களுக்கு முன் இருந்த விலையை விட அதிகமாக உள்ளதா என்றும், 200 (EMA) நாட்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகமா உள்ளதா என பார்த்து பங்குகளை வாங்குவது.
உதாரணத்திற்கு, நிறுவனம் “X” பங்கின் இன்றைய விலை 300, அதன் 50SMA 280 மற்றும் 200EMA 235 ஆக இருந்தால், நிறுவனம் “X” சிறந்த TA கொண்டுள்ளது, கடந்த 200 மற்றும் 50 நாட்களாக இந்த பங்கு விலை ஏற்றத்துடன் பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு, நிறுவனம் “X” பங்கின் இன்றைய விலை 300, அதன் 50SMA 350 மற்றும் 200EMA 400 ஆக இருந்தால், நிறுவனம் “X” இன் TA முடிவுகள் திருப்திகரமாக இல்லை, கடந்த 200 மற்றும் 50 நாட்களாக இந்த பங்கு விலை சரிவுடன் பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த பங்கின் விலை மேலும் குறையும் என்று அர்த்தம்.
Support மற்றும் resistance : வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருந்தால் support zone என்றும், அதிக அளவில் விற்பவர்கள் இருந்தால் resistance zone என்றும் அழைப்பார்கள். அதிக எண்ணிக்கையில் பங்குகள் வாங்கும் போது, அதன் விலை அதிகரிக்கும், தங்கள் லாபங்களை எடுக்க நினைப்பவர்கள், அதிகப்படியான பங்குகளை விற்கும் போது, அதன் விலை குறைய ஆரம்பிக்கும்(Demand Vs Supply).
Related post : நீண்ட கால முதலீடுகளுக்கு சிறந்த பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
ஏன் சிலர் அடிப்படை ஆய்வை விரும்புவதில்லை?
அடிப்படை ஆய்வு (FA) செய்ய, அந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை மிகவும் கவனமாக ஆராய வேண்டும். இது சுலபமான காரியம் இல்லை, அதனால் பலரும் FA ஆராய்வதற்கு பதில் TA வை ஆராய்ந்து தங்கள் முதலீடுகளை செய்கிறார்கள். நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டார்கள் என்றல் FA ஆராய்வது, மிகவும் சிறந்தது.
பங்கு சந்தையில் எதுவும் நிரந்தரம் இல்லை, சிறந்த FA கொண்ட பங்குகள், பன்னாட்டு சந்தை வீழ்ச்சி காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் சரியாலம், அதனால் சிறந்த FA கொண்டால் பங்குகளை வைத்திருந்தால், சந்தை மீண்டு வரும்போது, நமது பங்குகளும் உயரும்.
எது சிறந்தது?
எது சிறந்தது என்று சொல்வது கடினம், ஏனென்றால் தொழில்நுட்ப பகுப்பாய்வு குறுகிய கால வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு சிறப்பாக செயல்படுகிறது, அதே நேரத்தில் அடிப்படை பகுப்பாய்வு நீண்ட கால முதலீட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும். இரண்டு முறைகளும் பயனுள்ளதாக இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் இரண்டு வகையான ஆய்வுகளையும் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் பங்கு சந்தைக்கு புதியவர் என்றால், நீங்கள் ஒரு நிறுவனத்தை பற்றி மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் ஆராய வேண்டும். கடந்த 3 முதல் 5 வருடங்களாக அந்த நிறுவங்கள் பெற்ற லாபம், பணம் கையிருப்பு, மேலாண்மை துறையில் செய்த முதலீடுகள், கடன் சுமை போன்ற விவரங்களை தெளிவாக பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப அடிப்படை பகுப்பாய்வு
வெற்றிகரமான முதலீட்டாளர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்துகின்றனர் – எந்தப் பங்கை வாங்குவது அல்லது விற்பது என்பதை அடையாளம் காண அடிப்படை பகுப்பாய்வு(FA) மற்றும் எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க தொழில்நுட்ப பகுப்பாய்வு(TA) பயன்படுகிறது.
உங்கள் முதலீடுகள் வருங்காலத்தில் பெரிய அளவில் செழிப்பதற்கு, நீங்கள் முடிந்த வரை FA மற்றும் TA இரண்டையும் ஆராய்வதே உங்களுக்கு நல்ல ஒரு வளர்ச்சியை கொடுக்கும்.
நீங்கள் உங்கள் FA மற்றும் TA இங்கு காணலாம் : Fundamentals analysis and technical analysis website
பங்கு சந்தை பற்றிய விவரங்களின் தொகுப்பு : Share market information in Tamil
ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.