Future Electric Vehicle and air battery :
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது, பல நாடுகள, இவற்றிற்கு மாற்று எரிபொருளான மின்சார வாகனங்களை சோதனை முறையிலும் முழுமையான மின்சார வாகன பயன்பாட்டிற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது.
India வின் சாலை மற்றும் நெரிசலான நகரங்கள் மின்சார வாகனங்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வது சிறிது சவாலான விஷயம். மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையம் இன்னும் முழுமையாக இந்தியாவில் பயன் பாட்டிற்கு வரவில்லை.
𝔸𝕦𝕥𝕠𝕞𝕠𝕓𝕚𝕝𝕖 𝕀𝕟𝕕𝕦𝕤𝕥𝕣𝕪
இந்திய ஆட்டோமொபைல் சந்தை அடுத்த 10 வருடத்தில் குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் எனக் கணிப்பு நிலவும் நிலையில், லித்தியம் பயன்படுத்திப் பேட்டரி தயாரிப்பதை விடவும், அலுமினியம் பயன்படுத்திப் பேட்டரி தயாரிக்க முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது.
𝕀𝕟𝕕𝕚𝕒𝕟 𝕆𝕚𝕝 ℂ𝕠𝕣𝕡𝕠𝕣𝕒𝕥𝕚𝕠𝕟
இதற்காக நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இஸ்ரேல் நாட்டு நிறுவனமான ஃபைனர்ஜி (Phienergy) லீமிடெட் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
𝕀𝕟𝕕𝕚𝕒 𝕙𝕒𝕤 𝕣𝕚𝕔𝕙 𝔸𝕝𝕦𝕞𝕚𝕟𝕦𝕞 𝕆𝕣𝕖
இந்தியாவில் லித்தியம் தயாரிக்கச் சில வழிகள் இருந்தாலும், லித்தியம் உருவாக்குவதற்கான தாது அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் இந்தியாவில் அலுமினியம் தயாரிக்கும் பாக்சைட் தாது மிகவும் அதிகமாக இருப்பதாக இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் தலைவரான ராமகுமார் தெரிவித்துள்ளார்.
Air battery : 𝕀𝕤𝕣𝕒𝕖𝕝 ℙ𝕙𝕚𝕖𝕟𝕖𝕣𝕘𝕪 𝕔𝕠𝕣𝕡𝕠𝕣𝕒𝕥𝕚𝕠𝕟
இஸ்ரேல் நாட்டின் ஃபைனர்ஜி நிறுவனம் அலுமினியம் மற்றும் ஜிங்க் உலோகத்தை வைத்து மின்சாரத்தைச் சேமிக்கவும், பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பான முறையைக் கண்டுப்பிடித்து வெற்றி கண்டுள்ளது.
𝕋𝕙𝕣𝕖𝕖 𝕞𝕒𝕚𝕟 𝕓𝕖𝕟𝕖𝕗𝕚𝕥𝕤
இந்தியாவில் அதிகளவில் இருக்கும் அலுமினியத்தை வைத்து ஃபைனர்ஜி நிறுவனத்தின் அலுமினியம் – ஏர் பேட்டரியை தயாரிப்பது மூலம் 3 பயன்கள் உள்ளது.
1. மலிவான விலையில் தயாரிக்க முடியும்
2. நீண்ட தூர பயணத்திற்கான பேட்டரியை தயாரிக்க முடியும்
3. பாதுகாப்பான எனர்ஜி சேமிப்புத் தளத்தை உருவாக்க முடியும்
𝕀𝕟𝕕𝕚𝕒 𝕗𝕠𝕔𝕦𝕤 𝕠𝕟 𝔼𝕝𝕖𝕔𝕥𝕣𝕚𝕔 𝕍𝕖𝕙𝕚𝕔𝕝𝕖
கனவு இந்தியாவின் EV கனவிற்கு இந்தியன் ஆயில் – ஃபைனர்ஜி நிறுவன கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2020 ஆரம்பத்திலேயே இந்தியன் ஆயில் ஃபைனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
Future electric Vehicle in India :
இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தி மற்றும் அதற்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் மிகவும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ் கார்பொரேஷன், மஹிந்திரா, ஹ்யுண்டாய் மற்றும் அசோக் லேலண்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள், மின்சார வாகன உற்பத்தியில் பெரிய ஆர்வம் காட்டியுள்ளன.
Stocks related to Electric Vehicle :
- Tata Motors
- Ashok Leyland
- Tata Chemicals
- Graphite India Ltd
- Hindustan coper limited
- Hindalco Industries ltd
- Mahindra & Mahindra Ltd
- Maruti Suzuki
- Exide Industries
- Hero Motor corp
- Amararaja Batteries
- Greaves cotton
மின்சார உற்பத்திக்கு மாற்று வழி இந்தியாவில் கண்டுபிடித்தால் தவிர இந்தியாவில், மின்சார வாகனக் கனவு நிறைவேறுவது சிறிது காலம் பிடிக்கும். தற்போது 60% மின்சரம் நிலக்கரி மூலமே தயாரிக்கப்படுகிறது , மின்சார வாகனங்களின் உற்பத்தியை அரசாங்கம் உயர்த்தினாலும், அவற்றை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை கையாள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Related topics : Stock market information in tamil
Source : Tata Motors
Good and useful information, thanks.!
Useful information. Thanks for sharing😎