நீண்ட கால முதலீடுகள்
நீண்ட கால முதலீடுகளுக்கு சிறந்த பங்குகளை தேர்வு செய்வது மிகவும் சிரமான காரியம் இல்லை, நிறுவனங்களை பற்றி ஆராயத் தெரிந்தாலே போதும். இதற்காக நீங்கள் பல ஆயிரம் செலவு செய்து படிக்க தேவை இல்லை, சிறந்த நிறுவனங்களின் லாப நஷ்ட விவரங்களை அந்த நிறுவன இணைய தளம் வழியாகவே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த பங்குகளை ஆராய நான் தேர்ந்து எடுக்கும் வலைத்தளங்கள்.
முதல் மூன்று வலைதளங்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் பங்கு சம்பந்தமான விலை, லாபம் மற்றும் நஷ்ட விவரங்களை விரிவாக கொடுக்கும். அந்த நிறுவனத்தில் காலாண்டு பணப்பரிவர்த்தனை, முழு ஆண்டு பணப்பரிவர்த்தனை 52 நாட்களில் அந்த குறிப்பிட்ட பங்கின் அதிக பட்ச விலை மற்றும் குறைந்த பட்ச விலை போன்ற விவரங்களை மிகத் துல்லியமாக கொடுக்கும். நான்காவது வலைத்தளம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் தொழில் துறை சார்ந்த விவரங்களை விளக்கமாக கொடுக்கும்.
நிறுவனத்தின் அடிப்படை ஆய்வு (fundamental analysis)
ஒரு நிறுவனத்தின் அடிப்படை ஆய்வு என்பது, அந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை (fundamental analysis) ஆய்வு செய்வது. நிதி நிலை அறிக்கை என்பது வருவாய் மட்டும் சார்ந்தது அல்ல, லாபம் மற்றும் வரிகள் சேர்ந்தது. குறிப்பாக நீங்கள் பார்க்க வேண்டியது, ஒவ்வொரு காலாண்டிலும் அந்த நிறுவனம் எந்த அளவுக்கு திறனாக செயல்பட்டுள்ளது. கீழே இரண்டு நிறுவனங்களின் அடிப்படை ஆய்வு முடிவுகளை பகிர்ந்துள்ளேன்.
Revenue Vs Profit (வருவாய் Vs நிகர லாபம்)
நிறுவனம் “X” ஒவ்வொரு ஆண்டு சிறந்த வருவாய் ஈட்டுகிறது, நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. மாறாக நிறுவனம் “Y” வருவாய் உயர்வு மட்டுமே பார்க்கப்படுகிறது, நிகர லாபம் எதிர்மறை குறியீட்டில் நஷ்டமாக உள்ளது.
நீண்ட கால முதலீடுகளுக்கு ஒரு நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்வதை போல நிகர லாபமும் வளர வேண்டும், வருவாய் மட்டுமே கணக்கில் கொண்டு நிறுவனத்தை தேர்வு செய்ய முடியாது.
லாபம் பெரும் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வருகின்றன.
- Dividend
- Bonus
- Rights
- Project Expansion
- Research & Development
லாபத்தின் சிறிய பகுதியை பங்குதாரருக்கு பிரித்து அளிப்பது ஈவுத்தொகை (Dividend) ஆகும். இந்த டிவிடெண்ட் ஒரு பங்கின் (Equity) தரவு மதிப்பு (Face value) அடிப்படையில் வழங்கப்படும். பல நிறுவனங்கள் வருடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடெண்ட் வழங்குகின்றன.
சிறந்த நிறுவனங்களின் டிவிடெண்ட் எந்த ஆண்டும் தடை இல்லாமல் வழங்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை சிறந்ததாக இருக்கும் என்றே வைத்துக் கொள்ளலாம்.
இதே போல போனஸ், உங்களுக்கு பங்குகளாக வழங்கப்படும். 1:1, 1:2, 2:1, 3:5 என நிறுவனத்தின் லாபத்தை பொறுத்து இந்த விகிதம் மாறுபடும்.
ரைட்ஸ் (Rights) இதுவும் போனஸ் போல, இரண்டுக்கும் வித்யாசம் என்ன என்பதை தனியாக எழுதுகிறேன்.
விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு அந்த நிறுவனம் தங்களின் லாபத்தை நிறுவன முன்னேற்றத்திற்கும், நிறுவன விரிவாக்கத்திற்கு பயன்படுத்துகிறது. பங்குதாரருக்கு இந்த விரிவாக்கத்தின் மூலமும் பங்கின் விலை உயரும், இதனால் நமக்கு லாபமே.
சிறந்த நிறுவனத்தை தேர்ந்து எடுக்கும் போது, இவைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். டிவிடெண்ட் மற்றும் போனஸ் இவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு நிறுவனங்களை தேர்வு செய்யக் கூடாது, இவைகளுக்கு மதிப்பெண் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ROE என்பது பங்குதாரர்களின் பங்கு தொடர்பாக ஒரு நிறுவனத்தின் லாபத்தின் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ROE வருடா வருடம் உயரும் நிறுவனங்களில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Return On Equity மற்றும் Return On Capital Employed குறித்த தகவல்கள் அடுத்த பதிவுகளில் காணலாம்.
நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
Thank you for sharing such a nice blog. It’s really impressive. I appreciate your intelligence and knowledge. Karara Ceramics is the largest Tile company in India and deliver quality products and services to our customers. For more details visit: https://kararaceramics.in/