How to invest in share market in Tamil – Buy guide 2021

How to Invest?

2021 இல் முதலீடு செய்வது மிகவும் சுலபம், நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், இந்தியாவில் வர்த்தக கணக்குத் துவங்கி மிகவும் சுலபமாக வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீட்டில் விருப்பம் உள்ளவராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை சில மணி நேரம் செலவு செய்தாலே போதுமானது.

How to invest, share market in tamil, investment

Share Market Brokers

வர்த்தகக் கணக்கு துவங்க நீங்கள் ஏதேனும் ஒரு வங்கியில் Demat account மற்றும் Trading account துவங்க வேண்டும். இந்த Demat / Trading account உடன் உங்களின் சேமிப்புக்கு கணக்கை இணைத்துக் கொண்டாலே உங்களால் வர்த்தகம் எளிதாக செய்ய முடியும். வங்கியுடன் சேர்ந்த இந்த 2 in 1  கணக்கு அல்லது 3 in 1 கணக்கு நீங்கள் துவங்குவதற்கு PAN எண் மற்றும் உங்களது ID card தேவை.

மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தரகரிடம்(Broker)  நீங்கள் உங்கள் வர்த்தகக் கணக்கை துவங்கி உங்கள் முதலீட்டை துவக்கலாம். ஒவ்வொரு தரகரும் தனித்தனி ஆவணங்களை உங்களிடம் இருந்து கேட்கலாம், நீங்கள் அவர்களின் வலைத்தளத்தில் இந்த விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.

How to open Demat account 

உங்களிடம் இந்திய மொபைல் எண் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று, எந்த தரகராக இருந்தாலும், உங்களின் கைபேசி எண்ணிற்கு OTP தகவலை பரிமாறுவார்கள், உங்களின் OTP கொண்டு வர்த்தக கணக்கை எளிதில் துவங்கலாம். உங்களின் புகைப்படம் நேரலை (live) முறையில்  எடுக்கப்படும், பிறகு உங்களின் PAN அடையாள அட்டைமற்றும் கை எழுத்து பிரதி தேவைப்படும். அதிகபட்சம் 30 நிமிடங்கள் பிடிக்கும். 

How to Invest?

சந்தையில் முதலீடு செய்வதற்கு முதலில் நமக்கு வர்த்தக கணக்கு தேவை, உங்களின் வர்த்தக கணக்கில் login செய்ததும், உங்களின் விருப்ப தேர்வான பங்கை, அதன் குறியீடு வைத்து நீங்கள் தேடினால், உங்களுக்கு எளிதில் கிடைக்கும். 

உதாரணத்திற்கு (Ashok Leyland – ASHLEY, Tata Motors – TOTMOT, TVS Motors – TVSMOT, Infosys – INFTEC.)

நீங்கள் வாங்க வேண்டிய பங்கின் எண்ணிக்கை மற்றும் அதன் விலை பொறுத்து நீங்கள் “Buy” கொடுத்தால், பங்கு உங்கள் Demat account கணக்கிற்கு வர்த்தகம் செய்த மறு நாள் வரவு வைக்கப்படும்.

Share Market in Tamil

Intraday Trading

நாள் வர்த்தகம் என்றும் அழைக்கப்படும் Intraday Trading, ஒரே நாளில் பங்குகள் வாங்குவது மற்றும் விற்பது ஆகும். அதாவது காலை சந்தை திறந்தவுடன், நீங்கள் 1000 பங்குகளை, 10,000 ரூபாய்க்கு வாங்கினால் சந்தை முடிவடையும் போது நீங்கள் லாபமாக (11,000), இருந்தாலும் நஷ்டமாக இருந்தாலும் (9,000) விற்றுவிட வேண்டும். இல்லை என்றால், உங்கள் தரகர் அந்த பங்கை விற்றுவிடுவார்(Square-off).

Intraday என்பது அதிக ஆபத்து  நிறைந்தது, அதிக விவரம் தெரியாமல் Intraday செய்வது மிகவும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும். பங்குகளின் நகர்வை சரியாக கணித்து நீங்கள் வாங்கவோ அல்லது விற்கவோ செய்ய வேண்டும்.

Intraday trading அதிக லாபத்தை கொடுக்கும், இதனால் பலரும் தங்கள் முதலீடுகளை Intraday trading செலவிடுகிறார்கள். ஆனால் Normal trading ஒப்பிடும்போது இது அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது. உங்களால் ஒரு நாள் முழுவதும் கணினி முன் செலவிட முடியும் என்றால் நீங்கள் முயற்சி செய்யலாம், மற்றவர்கள் Intraday trading வை விட்டு தள்ளி இருப்பது சிறந்தது.

நீங்கள் சந்தையைப் தெளிவாக பார்க்க வேண்டும் மற்றும் உங்கள் வர்த்தகத்தை முழுமையடையச் செய்ய வேண்டும்(Square-off). இரண்டாவதாக, சரியான முடிவுகளை எடுக்க தினசரி அட்டவணையில் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis) செய்ய உங்களுக்கு நல்ல புரிதல் மற்றும் நேரம் தேவைப்படும்.

How to invest, share market in tamil, investment, How to invest in share market in tamil

Tips for Investment 

பங்கு சந்தை மற்றும் முதலீடுகள் எப்பொழுதும் இலாபகரமானவை  அல்ல, சில நேரங்களில் உங்களுக்கு பெரிய இழப்புகளை  ஏற்படுத்தும். அதனால் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினாலோ  அல்லது, intraday செய்ய விரும்பினாலோ சரியான நிறுவனத்தின் பங்கை தேர்வு செய்யவது மிகவும்  சிறந்தது. 

    • பங்கு சந்தையில் நீங்கள் நுழைவதற்கு முன்பு நீங்கள் முதலீடு செய்யப் போகிறீர்களா அல்லது நாள் வர்த்தகம் / வர்த்தகம் செய்யப் போகிறீர்களா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
    • வர்த்தகம் செய்வதற்கு முன்பு நீங்கள் பங்கு சந்தை பற்றிய அடிப்படை விவரங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
    • உங்களின் தரகர் மற்றும் வர்த்தகத் திட்டம்(Trading Plan) இவற்றை சரியாக  தேர்ந்தெடுக்கவும். அதிக வரி(tax)  மற்றும் தரகு கட்டணம்(Brokerage Charges) இதனால் உங்களுக்கு செலவாகாது.
    • பங்கு சந்தையில் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால்(Not investing only Trading) உங்களது நஷ்டங்களை குறைத்துக் கொள்ளுங்கள்(Stop loss)
    • முதலில் துவங்கும் போது மிகுந்த ஆர்வ மிகுதியில் அதிக முதலீடு செய்யாதீர்கள், உங்களின் முதலீடுகளை படிப்படியாக உயர்த்துங்கள். 
    • அகலக்கால் வைப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.
    • எக்காரணம் கொண்டும், கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்யாதீர்கள்.
    • அவசர கால தேவைக்கு உள்ள பணத்தை சந்தியில் முதலீடு செய்யவது பெரிய சிக்கல்.
    • விளம்பரங்களில் மற்றும் யாரேனும் உங்களுக்கு ஒரு பங்கை வாங்க சொன்னால், முற்றிலும் ஆராய்ந்த பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.
    • முடிந்த வரை உங்களின் முதலீடுகளை பல்வேறுத் துறையில் பிரித்து முதலீடு செய்யுங்கள்.
    • பங்கு சந்தையில் பொறுமை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Risk or Growth (Investment) 

பங்கு சந்தையில் முதலீடு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது,  அதிக லாபம் சம்பாதித்த ஒருவர் சந்தையை பணம் கொழிக்கும் ஒரு தொழிலாக பார்க்கிறார் மாறாக அதிக நஷ்டத்தை சந்தித்த ஒருவர் பங்கு சந்தையை முற்றிலும் சூதாட்டம் என்று விவரிக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை பங்கு சந்தை என்பது ஒருவரின் வயது, அனுபவம், அடிப்படை மற்றும் தொழுல்நுட்ப பகுப்பாய்வு திறன் இவற்றை பொறுத்து வேறுபடும். யாராலும் சந்தை நிலவரத்தை 100% துல்லியமாக கணிக்க முடியாது. 

சந்தை முதலீடுகள் அபாயமானதாக இருந்தாலும், சந்தை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்திருக்கிறது.

அணைத்து நீண்ட கால முதலீடுகளும் லாபத்தை கொடுப்பது இல்லை, நீங்கள் தேர்ந்தெடுக்கும்  நிறுவனம், அதன் வளர்ச்சி, நிர்வாகத் திறமை என பல்வேறு உத்திகளை பொறுத்து உங்கள் பங்குகளின் வளர்ச்சி மாறுபடும்.  

பங்கு சந்தை மற்றும் சிறந்த நிறுவனங்களின் தொகுப்பு பற்றி மேலும் அறிய 

ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

How to invest, share market in tamil, investment, How to invest in share market in tamil

நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.

How to invest, share market in tamil, investment, How to invest in share market in tamil

Spread the love

One thought on “How to invest in share market in Tamil – Buy guide 2021

Leave a Reply

Your email address will not be published.

error: Copying this Content is protected !!