How TVS Electric Vehicle iQube big impact EV business in 2022?

How TVS Electric Vehicle iQube impact EV business in 2022?

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது மின்சார இரு சக்கர வாகனமான iQube தயாரிக்க 200 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. மின்சார வாகனங்களின் தேவை மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்று வாகனமாக மின்சார வாகனம் பார்க்கப்படுவதால்,  திட்டமிட்டதை விட அதிகமாக முதலீடு செய்துள்ளது.

How TVS Electric Vehicle, iQube , EV

iQube

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகனம் iQube, 78km/h  வேகம் மற்றும் 75km ஒரு முறை சார்ஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவுடன் இந்த வாகனம் மக்களின் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் எல்லா மாநிலங்களிலும் கிடைக்கும்.

iQube வாகனம் 1,15,000 ரூபாய் சில்லறை விலையில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன(Ex-ShowRoom price). 5 வருடத்திற்கு 66,000  ருபாய் சேமிப்பு கிடைக்கும் என டிவிஎஸ் நிறுவனம் தங்கள் விளம்பரங்களில் தெரிவித்து இருக்கிறார்கள்.

புது டில்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் தற்போது டிவிஎஸ் மோட்டார்ஸின் இந்த மின்சார வாகனம் விற்பனைக்கு உள்ளது.

Source : TVS Motors

How TVS Electric Vehicle, EV, iQube

உதிரி பாகங்கள் 

மின்சார வாகனம் என்றாலே பேட்டரி மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. லித்தியம் அயன் (Lithium-Ion) பேட்டரிகள் மின்சார வாகனங்களின் மிகவும் விலையுயர்ந்த ஒரு பாகம், வாகனத்தின் விலையில் 40%-50% பேட்டரி விலை  மட்டுமே. மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் இந்த லித்தியம் அயன் பேட்டரிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

லித்தியம் அயன் பேட்டரிகளின் தேவை 2022 ஆம் ஆண்டிற்குள் 10GWh (Giga Watt hour )  அளவும், 2025  ஆண்டில் இதன் தேவை 60GWh மற்றும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் 120GWh தேவை இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

1. TDS Lithium-Ion Battery Gujarat Private Limited (TDSG)

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு தோஷிபா கார்பொரேஷன்(Toshiba Corporation), டென்சோ கார்பொரேஷன்(DENSO Corporation) மற்றும் சுசூகி மோட்டார் கம்பெனி (Suzuki Motor) லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது.   

2. Exide Industries

Exide நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி நிறுவனமான Leclanche SA வுடன் 75:25 என்ற கூட்டணியில் மின்சார வாகன பேட்டரிகளை தயாரிக்கிறது. மின்சார உதிரி பாகமான பேட்டரி சார்ந்த பங்குகளில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் Exide battery ஒரு சிறந்த பங்கு. 

3. Tata Chemicals 

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தனது குஜராத் ஆலையில் லித்தியம் அயன் உற்பத்தியை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் உலகின் மூன்றவது சோடா சாம்பல்(Soda Ash)  உற்பத்தி செய்யும் நிறுவனம். பேட்டரி தவிர்த்து இதர பொருட்களின் வளர்ச்சி இந்த பங்கின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. Amara Raja Batteries 

Amara Raja Batteries திருப்பதியில் தங்களது புதிய உற்பத்தி ஆலையை அமைக்கவிருக்கிறது. 

Amara Raja Batteries , iQube

அரசாங்கமும் 18100 கோடி ரூபாயை மின்சார வாகனங்களின் பேட்டரி தயாரிப்பிற்கும் அதனை சேமிப்பதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது. 

TVS Motors 

TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி செய்யும் நிறுவனமாகும், இது 18,217 கோடிக்கு மேல் வருமானம் (2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்) ஈட்டியுள்ளது. இது ஆண்டுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்கிறது மற்றும் 4.95 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை  உற்பத்தி  செய்யும் திறன் கொண்டது. 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் டிவிஎஸ் மோட்டார் இந்தியாவின் 2 வது பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

மின்சார வாகன வளர்ச்சி 

மற்ற மின்சார வாகன உற்பத்தியாளர்களை ஒப்பிடும் போது, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகனம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்  பாதை, இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் உற்பத்தி ஆலை, விற்பனைக்குப் பிறகு சேவை, வாகன உற்பத்தியில் நீண்ட கால அனுபவம் என சொல்லிக்கொண்டே போகலாம். 

ROE மற்றும் EPS 

டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகள் 2017 முதல் 2019 வரை சராசரி ROE 23.21 ஆக இருந்தது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ROE மதிப்பு 17.275 ஆக  உள்ளது. EPS (Earning per Share) பொறுத்தவரை, கடந்த ஐந்து ஆண்டு சராசரி 13 ஆக உள்ளது. குறைந்த விலை பங்குகளை நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்ய விரும்பினால் TVS motors ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ROE மற்றும் EPS பற்றிய விவரங்களுக்கு 

TVS motors லாபம் மற்றும் இழப்பு 

டிவிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த 11 ஆண்டுகளில் 1700% வளர்ந்துள்ளது. மார்ச் 2010 ஆண்டு 34 கோடியாக இருந்த நிகர லாபம் மார்ச் 2021 ஆமடு 594 கோடியாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு TVS நிறுவனத்தின் பங்குகள் 866% வளர்ச்சியை கொடுத்துள்ளது. 30மார்ச் 2011 ஆண்டு இதன் ஒரு பங்கின் விலை 59 ருபாய், இன்றய தேதியில் ஒரு பங்கின் விலை 512ரூபாய்,  2011 ஆண்டு நீங்கள் 50,000 முதலீடு செய்திருந்தால் இன்றைய மதிப்பு 4,33,000 ருபாய்(டிவிடென்ட் சேர்க்காமல்).

டிவிடென்ட் 

டிவிஎஸ் மோட்டார்ஸ் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீரான டிவிடென்ட் தரும் சிறந்த நிறுவனங்களில் ஒன்று. சராசரியாக வருடத்திற்கு இரண்டுமுறை தங்கள் லாபத்தின் பகுதியை டிவிடென்ட்களாக கொடுத்து வருகிறது. கோவிட்-19 தோற்று காலத்திலும் 2020இல் இரண்டு முறை மற்றும் 2021இல் இரண்டு முறையும் டிவிடெண்ட் வழங்கி உள்ளது. 

Research & Development 

TVS motors கடந்த பத்து ஆண்டுகளாக அமைதியாக மின்சார வாகனங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் தங்களது வாகனத்தை பெருக்குவதே அவர்களின்  லட்சியம். 

கோவிட் – 19 தொற்று காலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி சிறிது  தடைபட்டாலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.

Also Read : How to invest in Stock market in Tamil

ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

How TVS Electric Vehicle, iQube, EV

நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.

How TVS Electric Vehicle, iQube, EV

Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Copying this Content is protected !!