Return On Equity :
நிகர வருமானம் ÷ சராசரி பங்குதாரர்களின் பங்கு, அதாவது, ஒரு நிறுவனம் பங்குதாரர்களின் பணத்தை எவ்வளவு திறமையாக கையாளுகிறது என்பதை குறிக்கும் அளவீடு.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை இந்த ROE ஒவ்வொரு ஆண்டும் மேல் நோக்கி நகர்கிறதா (Positive growth) இல்லை வளர்ச்சி அடையாமல் இருக்கிறதா (Neutral or Negative growth ) என்று கணிப்பதன் மூலம் சுலபமாய் கணக்கிடலாம்.
இதன் விகிதம் 15% முதல் 20% வரை இருந்தால், இந்த நிறுவனத்தின் மற்ற அடிப்படை நிதி நிலைமைகளை கணித்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். 22% விற்கும் அதிகமாக இருந்தால், அந்த நிறுவனத்தில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Return on Capital employed :
ஒரு நிறுவனத்தின் ஒரு வருட நிகர வருமானம் முழுவதும் சம்பாதித்ததிலிருந்து அனைத்து செலவுகளையும் கழித்தால் வருவது ROCE.
நிறுவனம் தனது மூலதனத்தை லாபத்தை ஈட்டுவதற்கு எவ்வளவு திறமையாக பயன்படுத்துகிறது என்பதைப் பிரதிபலிக்க, மூலதனத்தின் வருவாயை ROCE அளவிடுகிறது. முதலீட்டாளர்களுக்கு இது ஒரு முக்கியமான குறியீடு, இது முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன்பு நிறுவனத்தின் திறன்களைப் பற்றிய நுண்ணறிவை அவர்களுக்கு வழங்குகிறது.
Return on Capital Equity = EBIT / Capital Employed.
EBIT = Earning of the company before Interest and Tax payments
(EBIT -வட்டி மற்றும் வரி செலுத்துவதற்கு முன்னர் நிறுவனத்தின் வருவாய்.)
Return on Capital Equity விகிதத்தின் உயர்ந்த மதிப்பு அந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்ய உகந்த நிறுவனம் என்பதை காட்டுகிறது. நாம் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், சிறந்த Return on Capital Equity மற்றும் Return on Equity உள்ள நிறுவனங்களை தேடி அதில் சிறந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
ROCE பொறுத்த வரை, துறை சார்ந்த நிறுவனங்களை ஒப்பிட்டு அதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் வங்கித் துறை பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால், மூண்று முதல் ஐந்து வங்கித் துறை நிறுவனங்களின் Return on Capital Equity மற்றும் Return on Equity விவரங்களை ஆராய வேண்டும்.
பங்கு சந்தையின் தந்தை என்றழைக்கப்படும் Warren Buffet பரிந்துரைப்படி, Return on Capital Equity மற்றும் Return on Equity 20% கிற்கும் அதிமாக உள்ள பங்குகளை நமது முதலீடு பட்டியலில் வைத்திருக்க வேண்டும்.
Source : Warren Buffet
ROE vs ROCE:
ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மதிப்பிடுவதற்கு Return on Equity மற்றும் Return on Capital Equity இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. Return on Capital Equity மதிப்பு Return on Equity மதிப்பை விட அதிகமாக இருந்தால், நிறுவனம் மூலதன செலவைக் குறைக்க தனது கடன்களை திறம்பட பயன்படுத்துகிறது என்பதை இது குறிக்கிறது. கடன்களை ஒரு நிறுவனம் திறன்பட கையாண்டால் அது பங்குதாரர்களுக்கு நீண்ட கால முதலீட்டிற்கு பெரிதும் உதவும்.
நீண்ட கால முதலீட்டிற்கு கட்டாயம் படிக்க
நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.
ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.