Systematic Investment plan Vs Systematic Equity plan(SIP Vs SEP)
நீங்கள் பரஸ்பர நிதிகளின் SIP(Mutual Funds SIP) மூலம் முதலீடு செய்யலாம். சந்தை திருத்தங்களின் போது சில முதலீட்டாளர்கள் தங்களுக்குப் பிடித்த பங்குகளை வாங்குவார்கள். SEP (Systematic Equity plan) என்பது முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளை வழக்கமான அடிப்படையில் (மாதாந்திர அல்லது காலாண்டு) வாங்குவதாகும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP சிறந்த வருவாயைக் கொடுக்குமா அல்லது Equity இல் SEP சிறந்த வருவாயைக் கொடுக்குமா என்று யோசிக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP என்றால் என்ன? Systematic Equity Plan (SEP) என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டுகளின் SIP மற்றும் Equity இல் SEP இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன? இவற்றில் எது சிறந்த முதலீடு?
SIP in Mutual Funds
SIP என்பது ஒரு முதலீட்டாளர் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில்(Systematic Investment Plan) ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட மற்றும் வழக்கமான இடைவெளியில், பொதுவாக வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டு (உதாரணத்திற்கு ரூ.500 அல்லது ரூ.1000 ஒரு மாதத்திற்கு) முதலீடு செய்வதாகும்.
இது முதலீட்டிற்கான ஒரு திட்டமிட்ட அணுகுமுறையாகும், இது வழக்கமான சேமிப்பு பழக்கத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குகிறது. வங்கி கணக்கில் இருந்து பணம் தானாக டெபிட் செய்யப்படுவதால் முதலீடு மிகவும் எளிது.
ஒவ்வொரு முறையும், முதலீட்டாளர் பணத்தை முதலீடு செய்யும் போது, கூடுதல் பங்குகள்(Units) சந்தை விகிதத்தில் வாங்கப்பட்டு அவரது கணக்கில் சேர்க்கப்படும். தற்போதைய சந்தை விகிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகள்(Units) ஒதுக்கப்படுகின்றன.
இது ஒரு சிறந்த முதலீடாகும், ஏனெனில் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் முதலீட்டை நிறுத்தலாம் அல்லது தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
Related post : Stock market information in Tamil
Systematic Equity Plan
ஒரு முதலீட்டாளர் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட பங்கில் நமது பணத்தை முதலீடு செய்வது. SEP பொறுத்தவரை நீண்டகால முதலீட்டிற்கு ஒரு சிறந்த பலனைக் கொடுக்கும். முதலீடு செய்யும் தொகை ஒரே அளவாக இருப்பதால், பங்கின் விலை குறையும் போது நமக்கு அதிக பங்குகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக, SEP இல் மாதம் ரூ:500, “X” நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். முதல் மாதம் ஒரு பங்கின் விலை ரூ:30, 500 ரூபாய்க்கு 16 பங்குகள் கிடைக்கும். வரும் மாதங்களில் பங்கின் விலை ரூ:25 இல் வர்த்தகம் ஆனால், நமது கணக்கில் 20 பங்குகள் வரவு வைக்கப்படும். விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு பங்குகளின் அளவு மாறுபடும்.
திரு சோம வள்ளியப்பன் அவர்களின் அள்ள அள்ளப் பணம் 6 மியூச்சுவல் ஃபண்ட் புத்தகத்தை வாங்கி படியுங்கள்
பங்கின் விலை உயரும் போது, நமக்கு குறைவான பங்குகள் கிடைக்கும். SEP இல் முதலீடு செய்ய நீங்கள் நீண்ட நேரம் செலவிடத் தேவையில்லை, சிறந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால் போதும்.
சிறந்த SEP பங்குகள்(500 ரூபாய்க்கும் குறைவான விலை உள்ள பங்குகள்):
- TVS Motors
- Ashok Leyland
- Indian Oil Corporation
- India Cements
- Gail
- ONGC
- Tata Power
- Tata Motors
- SBI
- Madras Fertilizers
Read also : Technical analysis Vs Fundamental analysis
SIP Vs SEP – எது சிறந்தது
Systematic Investment Plan மற்றும் Systematic Equity plan பற்றி மேலே பார்த்தோம், இவற்றில் சிறந்தது எது, எப்படி தேர்ந்தெடுக்கலாம் என பார்க்கலாம்.
மாதந்தோறும் முதலீடு – SIP Vs SEP
SIP யில் முதலீட்டாளர்களின் பணம், நிதி மேலாளரால்(Fund Manager) வெவ்வேறு துறைகளில் மற்றும் வெவ்வேறு வளர்ச்சி பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் நிகர முதலீட்டு / சொத்து மதிப்பு(Net Asset Value) சந்தை நிலவரங்களை பொறுத்து மாறுபடாது.
ஆனால் SEP யில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை மாதந்தோறும் வாங்குவோம், பங்குகளின் விலை குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அதே நிறுவனத்தின் பங்குகளை தான் வாங்க முடியும். இதனால், சந்தை ஏற்ற இறக்கங்களில் நமது SEP மதிப்பு மாறுபடும்.
Risk in SIP Vs SEP
SIP இல் முதலீடுகள் செய்வது நிதி மேலாளர், நாம் பணம் மட்டுமே காலத்திற்கேற்ப செலுத்துகிறோம், எந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பது நிதி மேலாளர்(Fund Manager) வசம் உள்ளதே தவிர முதலீட்டாளர்கள் கையில் இல்லை.
SEP இல் முதலீடு செய்வது மற்றும் சிறந்த பங்குகளை தேர்வு செய்வது இரண்டுமே முதலீட்டாளர்கள் கையில் தான் உள்ளது, நிதி மேலாளர் அளவுக்கு நமக்கு ஆராய்வதில் திறமை இல்லை என்றல், நமது முதலீடு சிறிது தடுமாறலாம் அல்லது நமது முதலீட்டை இழக்க நேரிடலாம். சிறந்த பங்குகளை தேர்வு செய்தால், நமது முதலீடு செழிக்கும்.
வரி மற்றும் தரகு கட்டணம் (Tax & Brokerage Charges)
SEP யில் நாம் நேரடியாக பங்குகளை வாங்கி விற்கிறோம், இதனால் வரி(Tax) மற்றும் தரகு கட்டணம்(Brokerage charges) செலுத்த வேண்டி இருக்கும். ஒவ்வொரு மாதம் நாம் வாங்கும் / விற்கும் பங்குகளுக்கு இந்த வரி மற்றும் தரகு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
SIP யில் வர்த்தகம் முற்றிலும் நிதி மேலாளர் கவனித்துக் கொள்வார், நாம் SIP யை முற்றிலும் நிறைவு செய்யும் போது மட்டுமே வரி மற்றும் தரகு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் வரி மற்றும் தரகு கட்டணம் பெரிதும் மிச்சப்படும்.
வளர்ச்சிக்கு எது சிறந்தது
SIP மற்றும் SEP இரண்டுமே குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்வது. SIP பரஸ்பர நிதியில் (Mutual Funds) முதலீடு செய்வது மற்றும் SEP நேரடியாக பங்கு சந்தையில் முதலீட்டாளரால் முதலீடு செய்படுவது.
SIP சந்தை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பெரிதும் மாறுபடாது மாறாக SEP சந்தை ஏற்ற இறக்கங்களில் மாறுபடும்.
உங்களுக்கு பங்கு சந்தையில் சிறந்த ஆய்வு செய்யும் திறமை இருந்தால், நீங்கள் சிறந்த பங்குகளை தேர்வு செய்து SEP யில் முதலீடு செய்யலாம். இல்லை என்றால், SIP சிறந்த தேர்வாக இருக்கும்.
ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.