What is Dividend Yield in Stock market?
What is Dividend
ஒரு நிறுவனம் இலாபங்களை ஈட்டும் போது, அதன் பங்குதாரர்கள் / முதலீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படுவது டிவிடென்ட்(Dividend) எனப்படும், ஏனெனில் அவர்கள் நிறுவனத்திற்கு தங்களின் முதலீடுகளை நிதியாக அளித்துள்ளனர்.
ஒரு டிவிடென்ட் என்பது ஒரு நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு செலுத்தும் இலாபங்களின் ஒரு பகுதியாகும். ஒரு நிறுவனம் இலாபங்களை பெரும்போது, அந்த வருவாய் முழுமையாகவும் அல்லது பகுதியாகவும் மறுமுதலீடு செய்யப்படலாம். வணிகத்தில் மீதமுள்ள வருவாய் அல்லது அதன் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு ஒரு டிவிடென்ட் செலுத்தலாம்.
டிவிடென்ட் என்பது ஒரு நிறுவனத்தின் மீதான நம்பிக்கைக்காக பங்குதாரருக்கு கொடுக்கப்படும் ஒரு வெகுமதி என்றும் கூறலாம். இருப்பினும், ஒரு நிறுவனம் டிவிடென்ட் கொடுத்தே தீர வேண்டும் என்று கட்டாயமில்லை. இந்த டிவிடென்ட் தொகை காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒரு முறை அந்த நிர்வாகத்தின் இயக்குனர்கள் சேர்ந்து முடிவெடுப்பார்கள்.
டிவிடென்ட் ஏன் கொடுக்கப்படுகிறது?
ஒரு நிறுவனத்தின் மீதான அவர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியாக பங்குதாரர்களால் டிவிடென்ட் எதிர்பார்க்கப்படலாம். டிவிடென்ட் கொடுப்பது ஒரு நிறுவனத்தின் மீது நேர்மறையான எண்ணங்களை பிரதிபலிக்கும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உதவுகின்றன.
டிவிடென்ட் கொடுப்பதால், நிறுவனத்தின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது, நீண்ட கால முதலீட்டாலர்களை சிறந்த டிவிடென்ட் தரும் நிறுவனங்கள் கவர்கிறது.
டிவிடென்ட் எப்படி கொடுக்கப்படுகிறது
டிவிடென்ட் தொகை எப்பொழுதும் அந்த பங்கின் முகப்பு மதிப்பில்(Face value) சதவிகிதமாகக் கொடுக்கப்படும். சந்தை ஏற்ற இறக்கத்திற்கும் டிவிடென்ட் மதிப்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு நிறுவனத்தின் முகப்பு விலை(Face value) 5ரூபாய் என வைத்துக் கொள்வோம், டிவிடெண்ட் 50% என அந்த நிறுவனம் அறிவித்தால், 50% X 5 = 2.5 ருபாய் ஒரு பங்கிற்கு நமக்கு கிடைக்கும் டிவிடென்ட். அந்த நிறுவனத்தில் நாம் 1000 பங்குகள் வைத்திருந்தால், நமக்கு கிடைக்கும் டிவிடென்ட் 2500 ருபாய்(Dividend yield).
2021 இல் Dividend நிறுவனங்களின் தொகுப்பு
சிறப்பு டிவிடென்ட்
ஒரு நிறுவனம், பல ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ள லாபத்தை ஒரு பரிசு போல சிறப்பு டிவிடென்ட் அறிவுக்கும். Abott india, 155 ருபாய் சிறப்பு டிவிடென்ட் மற்றும் 120 டிவிடெண்ட் தொகை அறிவித்திருந்தது.
டிவிடென்ட் தேதிகள் :
ஒரு நிறுவனம் டிவிடென்ட் அறிவித்தவுடன், 3 முக்கிய தேதிகளை நாம் கவனிக்க வேண்டும்.
Ex-dividend date:
டிவிடென்ட் பெறுவதற்கு தகுதியான தேதி முடியும் நாள் Ex-dividend தேதி என்றழைக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு பங்கின் Ex-dividend date 22 ஜூலை 2021 என இருந்தால், 21 ஜூலை 2021 அல்லது அதற்கு முன்பு வாங்கப்படும் பங்கிற்கு டிவிடென்ட் தரப்படும். Ex-dividend தேதிக்குப் பிறகு வாங்கும் பங்குகளுக்கு டிவிடென்ட் கிடைக்காது.
Record date:
இந்த தேதியில் பங்குதாரரின் பெயர் அந்த நிறுவனத்தின் டிவிடென்ட் தகுதி புத்தகத்தில் இருக்க வேண்டும், T+2 பொதுவாக, Ex-Date லிருந்து இரண்டு நாட்களில் record date வரும்.
Payment date :
நிறுவனம் டிவிடென்ட் தொகையை பங்குதாரருக்கு செலுத்தும் நாள்.
டிவிடென்ட் பங்குகளை வாங்கலாமா?
நமக்கு டிவிடென்ட் ஒரு இரண்டாம் நிலை வருமானத்தை தரும், அதனால் டிவிடென்ட் தரும் பங்குகளை தாராளமாக வாங்கலாம். டிவிடென்ட் தொகையை மட்டுமே கருத்தில் கொண்டு பங்குகளை தேர்வு செய்யக் கூடாது. அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை, தொழில்நுட்ப ஆய்வு என எல்லாவற்றையும் ஆராய்ந்தே தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு நிறுவனம் ரூ.15 டிவிடென்ட் அறிவிக்கிறது, Ex-date 20 ஜூலை 2021. 19 ஜூலை 2021 அந்த நிறுவனத்தின் பங்கின் விலை 300ரூ(Closing time), 20 ஜூலை அந்த பங்கு 285ரூபாய்க்கு வர்த்தகம் ஆகும்.
ஒரு நிறுவனம் டிவிடென்ட் செலுத்தும் போது, அது அதன் இலாபங்களில் சிலவற்றை பங்குதாரர்களுக்கு நேரடியாகத் திருப்பித் தருகிறது, நிலையான மற்றும் நம்பகமான நிறுவனமாக சந்தையில் அந்த நிறுவனம் நம்பிக்கை பெறுகிறது.
புதிய நிறுவனங்கள், அல்லது தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரும்பாலும் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக நிறுவனத்திற்குள் இலாபங்களை மறுமுதலீடு செய்கிறார்கள், எனவே வழக்கமாக, அவர்கள் டிவிடென்ட் கொடுப்பதில்லை.
நிறுவனங்களின் இலாபங்களை மறுமுதலீடு செய்வது, பெரும்பாலும் முதலீட்டாளர்களுக்கான பங்கு விலைகள் அதிகரிப்பதில் பிரதிபலிக்கிறது. எனவே, எந்த நிறுவனமும் டிவிடென்ட் செலுத்துகிறதா இல்லையா என்ற முடிவின் அடிப்படையில் சிறந்த நிறுவனமா என்று நிர்ணயிக்க முடியாது, அடிப்படை ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆய்வை பொறுத்தே நிறுவனத்தின் சிறப்புத் தன்மையை கணிக்க முடியும்.
Stock market information in Tamil
ICICI வங்கியில் உங்களது Trading & Demat அக்கௌன்ட் துவங்கிட இந்த லிங்க் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்களும் இதே போல் வலைதளம் தொடங்கி உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிரலாம். கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து இன்றே உங்களுக்கான வலைத்தளம் தொடங்குங்கள்.